Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குறைந்த காற்றழுத்தம்.. சென்னையில் வெளுக்கும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்!

Tamil Nadu Weather Update : சென்னையில் 2025 ஜூலை 13ஆம் தேதியான இன்று இரவு முழுவதும் கனமழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறைந்த காற்றழுத்தம்.. சென்னையில் வெளுக்கும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்!
வெதர்மேன் பிரதீப் ஜான்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 13 Jul 2025 22:10 PM

சென்னை, ஜூலை 13 : தமிழகத்தில் 2025 ஜூலை 16ஆம் தேதி முதல் கன முதல் மிக கனமழை (Tamil Nadu Weather Update) பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் (Tamil Nadu Weatherman Pradeep John) தெரிவித்துள்ளார். மேலும், சென்னையிலும் கனமழை பெய்யக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக்ததில் கடந்த சில தினங்களாகவே வெயில் சுட்டுடெரித்து வருகிறது. எப்போது, ஜூலை மாதத்தில் மழை கொட்டும் நிலையில், 2025ஆம் ஆண்டு அதற்கு நேர் மாறாக இருந்து வருகிறது. 2025 மே மாதத்தில் மழை கொட்டித் தீர்த்தது. தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களாகவே மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகரில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, “சென்னையை நோக்கி கடல் காற்று வீசுகிறது. இதனால், 2025 ஜூலை 13ஆம் தேதியான இன்று இரவு முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யலாம். நுங்கம்பாக்கம் 190 மீட்டர் மழை பெய்யலாம்.

Also Read : சென்னையில் இனி வரும் நாட்களில் மழை இருக்கும்.. பிரதீப் ஜான் சொல்வது என்ன?

பிரதீப் ஜான் சொன்ன வானிலை அப்டேட்

மீனம்பாக்கத்தில் 36 மி.மீ மட்டுமே மழை பெய்யலாம். 2025 ஜூலை 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆந்திர கடற்கரைக்கு அருகில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம்.

Also Read : செஞ்சிக் கோட்டைக்கு கிடைத்த அங்கீகாரம்.. உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ

மேலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கேரளா, கர்நாடக கடற்கரை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டி மாவட்டங்கள், வால்பாறை, நீலகிரியில் மிக முதல் அதிகனமழை பெய்யக் கூடும்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, 2025 ஜூலை 16,17ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.