AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெல்லை தென்காசிக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் மழை – பிரதீப் ஜான்

Tamil Nadu Weather Update: கிழக்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, டிசம்பர் 16, 2025 தேதியான இன்று நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், டிசம்பர் 17, 2025 தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லை தென்காசிக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் மழை – பிரதீப் ஜான்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 16 Dec 2025 13:46 PM IST

வானிலை நிலவரம், டிசம்பர் 16, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், இன்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பதிவாகி வருகிறது. இந்த மழை இரண்டு நாட்களுக்கு, அதாவது டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவிய நிலையில், அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்பட்டது.

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால், அதை காண சுற்றுலா பயணிகள் அப்பகுதிகளில் குவிந்து வருகின்றனர்.

நெல்லை தென்காசிக்கு கனமழை எச்சரிக்கை:

கிழக்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, டிசம்பர் 16, 2025 தேதியான இன்று நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், டிசம்பர் 17, 2025 தேதியான நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிமுகவின் ஒரே எதிரி திமுக…திமுக…திமுக…ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!

இதனைத் தொடர்ந்து, வரக்கூடிய டிசம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், டிசம்பர் 18 முதல் 20ஆம் தேதி வரை வெப்பநிலையின் தாக்கம் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது.

இன்றும் நாளையும் மழை தொடரும் – பிரதீப் ஜான்:


இந்த நிலையில், கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி முதல் டெல்டா மாவட்டங்கள் வரை, அதேபோல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழக காவல் துறையில் நீடிக்கும் ஆர்டர்லி முறை.. உடனடியாக திரும்பப்பெற தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு..

அதே நேரத்தில், உள் தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில், குறிப்பாக மாஞ்சோலை பகுதிகளில் மழை பதிவாகக்கூடும் என்றும், இந்த மழை மிதமானதாகவே இருக்கும்; கனமழையாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மழையின் தாக்கத்தால் இரவு நேர வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்பட்டாலும், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் குளிர்ந்த வானிலை நிலவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us