Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக காவல் துறையில் நீடிக்கும் ஆர்டர்லி முறை.. உடனடியாக திரும்பப்பெற தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு..

Orderlies Return: தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபியான அபய் குமார் சிங் , அனைத்து மாநகர காவல்துறை ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஆர்டர்லி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவலர்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காவல் துறையில் நீடிக்கும் ஆர்டர்லி முறை.. உடனடியாக திரும்பப்பெற தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Dec 2025 08:08 AM IST

சென்னை, டிசம்பர் 16, 2025: தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலைகள் செய்வதற்காக ஆர்டர்லி காவலர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபி அபிக் குமார் சிங் சுற்றறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில், அவர்களது வீட்டு உதவிக்காக ஆர்டர்லி காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நடைமுறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. அந்த காலத்தில் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பது, சீருடைகளை பராமரிப்பது, உயர் அதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை ஆர்டர்லிகள் மேற்கொண்டனர்.

காவல்துறையில் நீடிக்கும் ஆர்டர்லி முறை:

தொடக்கத்தில் காவல் உயர் அதிகாரிகளுக்கு வாகன ஓட்டுநராக இருப்பதும், உதவியாளராக செயல்படுவதுமே ஆர்டர்லிகளின் பணியாக இருந்தது. ஆனால் காலப்போக்கில், அவர்கள் வீட்டு வேலைகளை செய்யும் பணியாளர்களாக மாற்றப்பட்டனர்.

மேலும் படிக்க: ரூ. 39.20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்..

தமிழக காவல்துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க 1979 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இருப்பினும், தற்போது வரை பல இடங்களில் இந்த ஆர்டர்லி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை காவல்துறையினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், அவர்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

8000 போலீஸ் ஆர்டர்லியாக பணியாற்றுவதாக தகவல்:

இந்த சூழலில், தமிழகத்தில் சுமார் 8,000 பேர் ஆர்டர்லிகளாக பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான் கணிப்பது என்ன?

இந்த நிலையில், தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபியான அபய் குமார் சிங் , அனைத்து மாநகர காவல்துறை ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற சுற்றறிக்கை:

அந்த சுற்றறிக்கையில், பணியில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவலர்களை உடனடியாக திரும்பப் பெற்று, அவர்களை காவல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் வெளியிட்ட இந்த சுற்றறிக்கை காவல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த நடவடிக்கையை காவல் துறையினர் பலரும் வரவேற்றுள்ளனர்.