தமிழகம் முழுவதும் மாறும் வானிலை: மழையும், வெப்பமும் இருக்கும்…
Rain and Heat Alert for Tamil Nadu: தமிழகத்தில் 2025 ஜூலை 12 இன்று மற்றும் 13 ஆம் தேதி நாளை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 2025 ஜூலை 15 முதல் 17 வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். சில பகுதிகளில் வெப்பநிலை 100°F தாண்டி அதிகரித்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு ஜூலை 12: மேற்கு திசை காற்றின் வேகமாற்றம் காரணமாக (change in the speed of the westerly wind), தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் (In Tamil Nadu, Puducherry and Karaikal) 2025 ஜூலை 12 இன்று மற்றும் 13 நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 2025 ஜூலை 15 முதல் 17 வரை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் 100°F-ஐ தாண்டிய வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரையில் 40.2°C வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் லேசான மழையுடன் மேகமூட்டம் காணப்படுகிறது. 2025 ஜூலை 14 வரை வெப்பநிலை இயல்பைவிட 2-4°C அதிகமாக இருக்கும் என வானிலை மையம் (Chennai Weather Center) எச்சரிக்கிறது.
தமிழகம் முழுவதும் மாறும் வானிலை
மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக, இன்று 2025 ஜூலை 12ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கோவை, தென்காசி, நீலகிரி, திண்டுக்கல், விழுப்புரம், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வாய்ப்பு உள்ளது.
இதேபோல், 2025 ஜூலை 15 முதல் 17ம் தேதி வரையிலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் சில இடங்களில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Also Read: பழனி கோயில் போறீங்களா? 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து
தொடர்ந்து வரும் வெப்ப அலை காரணமாக ஜூலை 14 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சாதாரணத்தைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம். குறிப்பாக, ஜூலை 11ம் தேதி மதுரை பகுதியில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2025 ஜூலை 11 நேற்று நாமக்கல், ஈரோடு, சேலம், நீலகிரி, கோவை, சிவகங்கை, கடலூர், தருமபுரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 2 செ.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இக்காலக்கட்டத்தில் அதிக வெப்பம் 100°F (ஃபாரன்ஹீட்) தாண்டியது.
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால், வெப்பத்தால் அவதியடைந்த மக்கள் சிறிது குளிர்ச்சியைக் கண்டனர். இருப்பினும் திடீர் மழையால் வாகன ஓட்டிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது.