AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா? வானிலை ரிப்போர்ட்..

Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா? வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Jun 2025 14:26 PM IST

வானிலை நிலவரம், 12 ஜூன், 2025: தமிழகத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவ மழை (SowthWest Monsoon) தொடங்கிய நிலையில் அனேக மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 10 செண்டி மீட்டர் மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி, சின்ன கல்லாறு கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஐந்து சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் (Tamil Nadu) அடுத்த ஏழு நாட்களுக்கு அநேக மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 12 2025 ஆன இன்று கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி நீலகிரி தேனி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?


ஜூன் 13ஆம் தேதி ஆன நாளை கோவை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழியம் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் ஜூன் 18ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை ஒரு பக்கம் இருக்க வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஓரிரு இடத்தில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்தவரை பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் பிற்பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு நகரின் ஒரு சில பகுதிகளில், அவ்வப்போது பலத்த காற்றுடன் கனமழை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் மீனம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை அதிகபட்சமாக மதுரையில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

Follow Us