அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்கள் வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும். குறிப்பாக, நீலகிர மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை, மதுரை, விருதுநகர், திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்

மழை

Published: 

15 Jun 2025 06:50 AM

 IST

சென்னை, ஜூன் 15 : தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் (Tamil Nadu Weather Alert) என வானலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 2025 மே 24ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பலத்த மழை பெய்தது. 2025 மே மாதம் முழுவதும் மழை பெய்து வந்த நிலையில், 2025 ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு,  மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.  இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழக்ததில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது.

அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை

இந்த நிலையில்,  அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஜூன் 15ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கன முதல் அதி கனமழை பெய்யக் கூடும்.

கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு சேலம், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2025 ஜூன் 16ஆம் தேதி தமிழகத்தில் கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை நிலவரம்


2025 ஜூன் 17ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஜூன் 18ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, 2025 ஜூன் 19,20ஆம் தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை 2025 ஜூன் 15ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us
Related Stories
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் திருட்டு.. நாகர்கோவில் தபால் நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. சிக்கும் ஊழியர்கள்!
சிறுமி பாலியல் வழக்கு.. குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை.. 9 ஆண்டுகளுக்கு பின் நீதி.. போக்ஸோ நீதிமன்றம் அதிரடி!
இரவில் நண்பர்களுடன் மது விருந்து.. காலையில் ரத்த வெள்ளத்தில் கொலை.. காஞ்சிபுரத்தில் நடுங்க வைக்கும் சம்பவம்!
வாக்குப்பதிவு நாளில் பேருந்துகள் நிறுத்தம் திட்டமிட்ட சதி.. தவெக நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு!
தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்.. விஜய்யின் பிளான் லீக்கானதா? சமூகவலைதளங்களில் வைரலாகும் போஸ்ட்!
2 மணி நேரம் கேமரா இணைப்பு கட்.. பின்னோக்கி சென்ற வீடியோ காட்சிகள்.. வாக்குப்பதிவு இயந்திர அறையில் பரபரப்பு!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்