Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் மழை தொடருமா? வானிலை மையம் அப்டேட்

Tamil Nadu Heatwave: 2025 ஜூன் 8 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் 100°F க்கு மேல் வெப்பநிலை பதிவானது. ஈரோடு, வேலூர், மதுரை ஆகிய இடங்களில் 102°F வரை வெப்பம் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், ஜூன் 10 முதல் 13 வரை கடலூர், வேலூர், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் லேசான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை தொடருமா? வானிலை மையம் அப்டேட்
சென்னையில் சிட்டிக்குள் பரவலான மழைImage Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 09 Jun 2025 06:35 AM

தமிழ்நாடு ஜூன் 09: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2025 ஜூன்8 அன்று கடும் வெப்பம் பதிவானது; 10 இடங்களில் வெப்பநிலை 100° ஃபாரன்ஹீட்டை கடந்தது. ஈரோட்டில் அதிகபட்சம் 103°F, வேலூர், மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை 102°F ஆகப் பதிவானது. சென்னையின் நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் வெப்பம் அதிகரித்தது. அதே நேரத்தில், 2025 ஜூன் 10 முதல் 13 வரை பல மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். 2025 ஜூன் 09 இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2025 ஜூன் 8 ஆம் தேதி பல பகுதிகளில் கடும் வெப்பம் பதிவானது. சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுப்படி, 10 இடங்களில் வெப்பநிலை 100° ஃபாரன்ஹீட்டை எட்டியது. கடந்த சில நாட்களில் ஏற்பட்ட மழையால் சில நேரத்துக்கு வெப்ப நிவாரணம் கிடைத்திருந்தாலும், தற்போது மீண்டும் வெப்பம் உச்சத்தை எட்டியுள்ளது.

ஈரோட்டில் அதிகபட்சமாக 103°F, வேலூர், மதுரை விமான நிலையம் மற்றும் பாளையங்கோட்டையில் 102°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையின் நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கரூர் பரமத்தி, புதுச்சேரி, திருச்சி, மதுரை நகரம் மற்றும் அதிராம்பட்டினம் ஆகிய இடங்களிலும் வெப்பநிலை 100°F-ஐ மீறியுள்ளது.

தமிழகத்தில் மழை தொடருமா?

தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2025 ஜூன் 8 அன்று  பல இடங்களில் 100°F க்கு மேல் வெப்பநிலை பதிவானது. ஈரோடு, வேலூர், மதுரை ஆகிய இடங்களில் 102°F வரை வெப்பம் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், ஜூன் 10 முதல் 13 வரை கடலூர், வேலூர், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் லேசான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஜூன் 10-ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். 2025 ஜூன் 11-ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12, 13 தேதிகளில் நீலகிரி, கோவை மழைக்கு வாய்ப்பு

மேலும், 2025 ஜூன் 12, 13 தேதிகளில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி வரை தென்காசி, தேனி, திண்டுக்கல், நெல்லை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, கோவை ஆகிய 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.