Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TN SSLC Result 2025 : நாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட்.. பார்ப்பது எப்படி?

TN SSLC, HSE +1 Result 2025 : தமிழகத்தில் 2025 மே 16ஆம் தேதியான நாளை 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வெளியாக உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பகல் 2 மணிக்கு வெளியாக உள்ளது. எனவே, பொதுத்தேர்வு முடிவுகளை எப்பது பார்ப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளவோம்.

TN SSLC Result 2025 : நாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட்.. பார்ப்பது எப்படி?
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 May 2025 14:22 PM

சென்னை, மே 15 : தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் (TN SSLC Result) 2025 மே 16ஆம் தேதியான நாளை வெளியாகுகிறது. 9.13 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய நிலையில், அதற்கான முடிவுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Minister Anbil Mahesh) பொய்யாமொழி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை 2025 மே 16ஆம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு வெளியிடுகிறார். 2025 மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வை மொத்தம் 9,13,036 பேர் எழுதியுள்ளனர்.

நாளை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

12,480 பள்ளிகளில் நடந்த தேர்வை, மாணவர்கள் 4,46,411 பேரும், மாணவிகள் 4,40,465 பேரும், தனித் தேர்வர்கள் 25,888 பேரும், சிறைவாசிகள் 272 பேரும் எழுதினர். இந்த தேர்வு முடிவுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருந்தனர். எனவே, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தற்போது மூன்று நாட்களுக்கு முன்பே வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.  அதன்படி, 2025 மே 16ஆம் தேதி காலை 9 மணிக்கு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியாக உள்ளது. மேலும், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் வெளியாகுகிறது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடந்தது.

இந்த தேர்வை 8.23 லட்சம் மாணவர்கள் எழுதினர்.  இந்த நிலையில், இந்த தேர்வின் முடிவுகளும் 2025 மே 16ஆம் தேதியான நாளை பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதனையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். எனவே, 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை எப்பது பார்ப்பது என்பதை குறித்த விவரங்களை பார்ப்போம்.

ரிசல்ட் பார்ப்பது எப்படி?

மாணவர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்து கொள்ள முடியும். தங்களது பதிவு எண், பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீட்டு தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். மேலும், என்ற இணையதளம் மூலமாகவும் தேர்வர்க்ள தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இதற்கு டிஜிலாக்கரை லாகின் செய்து கொள்ளுங்கள். மேலும், மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல, தனித்தேர்வர்களுக்கு செல்போன் எண்ணுக்கு மெசேஜ் மூலம் முடிவுகள் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலிருந்து டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு
டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலிருந்து டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு...
பெண்களை விட ஆண்களுக்கு வழுக்கை அதிகமாக ஏற்பட என்ன காரணம்?
பெண்களை விட ஆண்களுக்கு வழுக்கை அதிகமாக ஏற்பட என்ன காரணம்?...
வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்கும் பாகிஸ்தான் - அரசு எச்சரிக்கை!
வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்கும் பாகிஸ்தான் - அரசு எச்சரிக்கை!...
பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லையா..? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்!
பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லையா..? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்!...
மணி சார் என்ன செல்லமா அப்படிதான் கூப்டுவார் - நடிகை மதுபாலா
மணி சார் என்ன செல்லமா அப்படிதான் கூப்டுவார் - நடிகை மதுபாலா...
மோட்ச தீபம் ஏற்று வழிபட்டால் இவ்வளவு நன்மையா? - வழிமுறைகள் இதோ!
மோட்ச தீபம் ஏற்று வழிபட்டால் இவ்வளவு நன்மையா? - வழிமுறைகள் இதோ!...
சிலருக்கு கிரெடிட் கார்டுகள் சிக்கலை ஏற்படுத்தலாம் - ஏன்?
சிலருக்கு கிரெடிட் கார்டுகள் சிக்கலை ஏற்படுத்தலாம் - ஏன்?...
இந்திய ரயில்வேயின் புதிய ரூல் - ஏசி கோச்சில் போறவங்களுக்கு ஆறுதல்
இந்திய ரயில்வேயின் புதிய ரூல் - ஏசி கோச்சில் போறவங்களுக்கு ஆறுதல்...
இந்தியாவில் ஆப்பிள் போன்களை தயாரிப்பதை விரும்பவில்லை - டிரம்ப்
இந்தியாவில் ஆப்பிள் போன்களை தயாரிப்பதை விரும்பவில்லை - டிரம்ப்...
சந்திரனால் உருவாகும் ராஜயோகம்.. இந்த 6 ராசிக்கு இனிமேல் பண மழை!
சந்திரனால் உருவாகும் ராஜயோகம்.. இந்த 6 ராசிக்கு இனிமேல் பண மழை!...
பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? - ரிசர்வ் வங்கியின் புது ரூல்ஸ்
பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? - ரிசர்வ் வங்கியின் புது ரூல்ஸ்...