
Board Results
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநில கல்வி திட்டத்தின் கீழ் 10, 11, மற்றும் 12 ஆகிய 3 வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் சிபிஎஸ்இ கல்வி திட்டங்களின் கீழும் பள்ளிகள் செயல்பட்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவத்தேர்வு முறை அமலில் இருந்து வரும் நிலையில் இந்த 3 வகுப்புகளுக்கு ஓவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் வரை பொதுத்தேர்வுகள் நடைபெறும். முதலில் 1200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த சில ஆண்டுகளாக 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல் மாநில, மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பவர்களின் விவரங்களும் வெளியிடப்படுவதில்லை. இதன்மூலம் மதிப்பெண் அடிப்படையில் மாணவ, மாணவியர்களிடையே ஏற்ற தாழ்வு,தேர்வில் குறைந்த மதிப்பெண் அல்லது தோல்வியடைந்தால் விபரீத முயற்சிகளை மேற்கொள்வது போன்றவை பெருமளவில் குறைந்துள்ளது. பொதுத்தேர்வு தொடர்பான தகவல்களை நாம் இங்கு காணலாம்.
வெளியானது பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. எந்த மாவட்டம் டாப்.. முழு விவரம்!
Tamil Nadu Class 12 Board Result 2025 : தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வெளியாகி உள்ளது. 8.02 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வை எழுதிய நிலையில், அதற்கான முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- Umabarkavi K
- Updated on: May 8, 2025
- 09:30 am
+2 தேர்வு முடிவுகள் குறித்த பயம்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. தஞ்சையில் அதிர்ச்சி!
12th Student Suicide In Thanjavur : தஞ்சாவூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்வு முடிவுகளை நினைத்து பல நாட்களாக மன உளைச்சலில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.
- Umabarkavi K
- Updated on: May 8, 2025
- 08:03 am
TN HSE+2 Result 2025: வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் – ரிசல்ட்டை எப்படி பார்ப்பது?
Tamil Nadu Board Class 12 Result 2025 : தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை முடிவும் செய்யும் தேர்வு முடிவுகள் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- Karthikeyan S
- Updated on: May 8, 2025
- 07:36 am
Tamil Nadu Class 12 Result 2025: மே 8ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?
Tamil Nadu Class 12, TN HSE+2 Result 2025: தமிழகத்தில் மே 8 ம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிடுகிறார். மாணவர்கள் தங்கள் பதிவுப்பெறு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை பெறலாம்.
- Sivasankari Bose
- Updated on: May 7, 2025
- 16:59 pm
வெளியாகும் சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்? – தெரிந்துகொள்வது எப்படி?
CBSE Exam Result: 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பாண்டில் சுமார் 42 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்வது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: May 7, 2025
- 17:00 pm
10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய அறிவிப்பு
10th and 12th Class Exam Result: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2025 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தாமதம் இன்றி வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்வுத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண்கள் கணினிமயமாக்கும் பணிகள் விரைவில் நடைபெறுகின்றன. முடிவுகள் வெளியானவுடன் மாணவர்கள் இணையதளம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மூலம் அவற்றை அறியலாம்.
- Sivasankari Bose
- Updated on: May 7, 2025
- 17:02 pm
விடைகளை படித்து சரியான மதிப்பெண் போடுங்க..! ஆசிரியர்களுக்கு அறிவுரை
Answer Sheet Correction Work: தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டுக்கான பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. 40 ஆயிரம் ஆசிரியர்கள் 80 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு, தேர்வுத்துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மதிப்பீடு செய்கின்றனர். மதிப்பெண் குறைபாடு உள்ளிட்ட புகார்கள் தவிர்க்க, ஒவ்வொரு விடையையும் கவனமாக மதிப்பீடு செய்து, சரியாக மதிப்பெண்கள் கணக்கீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: May 7, 2025
- 17:43 pm