Tamil Nadu Class 12 Result 2025: மே 8ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?
Tamil Nadu Class 12, TN HSE+2 Result 2025: தமிழகத்தில் மே 8 ம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிடுகிறார். மாணவர்கள் தங்கள் பதிவுப்பெறு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை பெறலாம்.

தமிழகத்தில் (Tamilnadu) 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் (Public Exam Result) மே 8 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. இம்முறை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9 மணிக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளார். பொதுத் தேர்வுகள் முடிவுகளை கடந்த ஆண்டு காலை 9.30 மணிக்கு வெளியிட்டனர். ஆனால் இந்த ஆண்டு சிறிது முன்னதாகவே, காலை 9 மணிக்கே முடிவுகள் வெளியிடப்படுவதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாணவர்கள், தங்கள் தேர்வு முடிவுகளை தொலைபேசி எண்ணை பயன்படுத்தி SMS மூலம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் காணலாம்.
தேர்வு விவரங்கள்
இந்த ஆண்டில் மட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 8.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை நடத்தப்பட்டன. தற்போது மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்து முடிவுகள் வெளியிடப்பட தயாராகி வருகிறது.
முடிவுகளை காணும் இணையதளங்கள்
மாணவர்கள் தங்கள் முடிவுகளை கீழ்காணும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் காணலாம்:
www.tnresults.nic.in
www.dge.tn.gov.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
மாணவர்கள் தங்கள் பதிவுப்பெறு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை பெறலாம். இணையதளங்களில் அதிகப் போக்குவரத்து ஏற்பட்டால் மாற்று இணையதளங்கள் மூலமும் முடிவுகளை காண வசதி செய்யப்பட்டுள்ளது.