Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TN SSLC Result 2025: வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி.. எந்த மாவட்டம் டாப்?

Tamil Nadu Class 10 Board Result 2025: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. 9 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ஆம் தேர்வுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

TN SSLC Result 2025: வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி.. எந்த மாவட்டம் டாப்?
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 May 2025 09:49 AM

சென்னை, மே 16 : தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் (Tamil Nadu Class 10 Board Result 2025) வெளியாகி உள்ளது. 9 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ஆம் தேர்வுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். மாணவிகள் 4.40 லட்சம் பேரும், மாணவர்கள் 4.6 லட்சம் பேரும், தனித் தேர்வர்கள் 25,888 பேரும், சிறைவாசிகள் 272 பேரும் என மொத்தம் 9,13,036 பேர் தேர்வை எழுதியுள்ளனர்.  இந்த நிலையில், இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.  dge.tn.nic.in, tnresults.nic.in என்ற இணையதளம் மூலம் பொதுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இதில், மாணவிகள் 4,17,183 மாணவிகளும், 4,00,078 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளை அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 4.14 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

கடந்த 2024ஆம் கல்வியாண்டை விட, 2025ஆம் ஆண்டில் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தார். 2025ஆம் ஆண்டு 93.80 சவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நைலயில், 2.25 சதவீதம் தேர்ச்சி உயர்ந்துள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகள் 91.26 சதவீத தேர்ச்சியும், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 93.63 சதவீத தேர்ச்சியும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.99 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. மேலும், இருபாலர் பள்ளிகளில் 94.06 சதவீத தேர்ச்சியும், பெண்கள் பள்ளிகளில் 95.36 சதவீத தேர்ச்சியும், ஆண்கள் பள்ளியல் 87.86 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 98.31 சதவீத தேர்ச்சி பெற்றது சிவகங்கை மாவட்டம். அடுத்ததாக, விருதுநகர் மாவட்டம் 97.45 சதவீதமும், தூத்துக்குடி மாவட்டம் 96.76 சதவீதமும், கன்னியாகுமரி மாவட்டம் 96.66 சதவீதமும், திருச்சி மாவட்டம் 96.61 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.

முதலிடத்தை பிடித்த அரியலூர் மாவட்டம்

பாட வாரியாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதகிபட்சமாக ஆங்கிலத்தில் 99.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 98.09 சதவீதமும், கணிதத்தில் 96.57 சதவீதமும், அறிவியலில் 97.90 சதவீதமும், சமூக அறிவியல் பாடத்தில் 98.49 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், அறிவியில் பாடத்தில் 10,838 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அடுத்தாக, சமூக அறிவியலில் 10,256 மாணவர்களும், கணிதத்தில் 1,996 மாணவர்களும், ஆங்கிலத்தில் 346 மாணவர்களும், தமிழ் பாடத்தில் 8 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், தேர்வு எழுதிய மாற்றத்திறனாளி மாணவர்கள் 12,290 பேர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 11,409 ஆகும். மேலும், 237 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில், 230 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 23,769 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய நிலையில், 23,769 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. வெளியான தகவல்
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. வெளியான தகவல்...
ஜோதிடம் என்பது உண்மை.. நடிகர் ராஜேஷின் ஆன்மிக அனுபவங்கள்!
ஜோதிடம் என்பது உண்மை.. நடிகர் ராஜேஷின் ஆன்மிக அனுபவங்கள்!...
முதுகு வலி: சித்த மருத்துவ சிகிச்சை மூலம் எப்படி சரி செய்வது?
முதுகு வலி: சித்த மருத்துவ சிகிச்சை மூலம் எப்படி சரி செய்வது?...
வீட்டுக்கு வந்த 3 பேர்.. காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!
வீட்டுக்கு வந்த 3 பேர்.. காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!...
ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு தீர்வு தரும் பதஞ்சலியின் மருந்துகள்!
ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு தீர்வு தரும் பதஞ்சலியின் மருந்துகள்!...
துணைத்தேர்வுகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
துணைத்தேர்வுகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?...
பாமகவில் மோதல்.. கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி.. என்ன விஷயம்?
பாமகவில் மோதல்.. கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி.. என்ன விஷயம்?...
மாமனாக மக்களின் மனதை வென்றாரா சூரி? ட்விட்டர் விமர்சனம்
மாமனாக மக்களின் மனதை வென்றாரா சூரி? ட்விட்டர் விமர்சனம்...
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!...
TN 10, 11th Result: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள் எவை?
TN 10, 11th Result: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள் எவை?...
சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ED ரெய்டு
சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ED ரெய்டு...