Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெளியானது பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. எந்த மாவட்டம் டாப்.. முழு விவரம்!

Tamil Nadu Class 12 Board Result 2025 : தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வெளியாகி உள்ளது. 8.02 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வை எழுதிய நிலையில், அதற்கான முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வெளியானது பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. எந்த மாவட்டம் டாப்.. முழு விவரம்!
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடுImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 May 2025 09:30 AM

சென்னை, மே 08: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை (Tamil Nadu Class 12 Board Result) பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2025 மே 8ஆம் தேதியான இன்று காலை 9 மணிக்கு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியானதும் மாணவர்கள் பள்ளியில் சென்று அறிய முடியும். மேலும், எளிதாக வீட்டில் இருந்தபடியே தேர்வு முடிவுகளை அறிய https://tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வெளியானது பிளஸ் டூ தேர்வு முடிவுகள்

மேலும், தனித்தேர்வர்கள் தங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் மெசேஜ் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.03 சதவீதம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதமாக இருந்தது.

மேலும், மாணவிகளை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 4,05,472 மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், 3,47,670 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதில், அரசுப் பள்ளி மாணவர்ள 91.94 சதவீத மாணவர்களும், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 95.71 சதவீத மாணவர்களும், தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்களும் 98.88 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், அதிகபட்சக கணினி அறிவியல் தேர்வில் 9,536 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அடுத்தாக, கணினி பயன்பாடுகள் தேர்வில் 4,208 மாணவர்களும், கணிதம் தேர்வில் 3,022 மாணவர்களும், வேதியில் தேர்வில் 3,181 மாணவர்களும், வணிகவியல் தேர்வில் 1,624 மாணவர்களும், கணக்கு அறிவியல் தேர்வில் 1,240 மாணவர்களும, தமிழ் தேர்வில் 135 மாணவர்களும், உயிரியல் தேர்வில் 827 மாணவர்களும், தாவரவியில் தேர்வில் 269 மாணவர்களும, பொருளியில் தேர்வில் 556 மாணவர்களும், வணிக கணிதம் மற்றும் புள்ளியில் தேர்வில் 273 மாணவ்ரகளும் என 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

எந்த மாவட்டம் டாப்?

குறிப்பாக, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியாலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அரியலூரில் 98.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்தாக, ஈரோட்டில் 97.98 சதவீத மாணவர்களும், திருப்பூர் மாவட்டத்தில் 97.53 சதவீத மாணவர்களும், கோவையில் 97.48 சதவீத மாணவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 97.01 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 26ஆம் தேதி துணை தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதற்கான விரைவான அறிவிப்புகள் விரைவில் பள்ளிக்கல்வித்துறை வெளியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!...
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?...
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!...
சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் - பிரதீப் ஜான் ..
சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் - பிரதீப் ஜான் .....
சித்ரா பௌர்ணமி .. அனைவரும் செல்ல வேண்டிய சித்திரகுப்தன் கோயில்!
சித்ரா பௌர்ணமி .. அனைவரும் செல்ல வேண்டிய சித்திரகுப்தன் கோயில்!...
உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வேண்டுமா? - ஆலோசனை எண் இதோ!
உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வேண்டுமா? - ஆலோசனை எண் இதோ!...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?...
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் கடனை யார் செலுத்துவது?
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் கடனை யார் செலுத்துவது?...
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?...
நெகட்டிவ் விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொண்டே வளர்கிறேன்...
நெகட்டிவ் விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொண்டே வளர்கிறேன்......
துரைமுருகன், ரகுபதிக்கு இலாகா மாற்றம்.. அதிரடி அறிவிப்பு
துரைமுருகன், ரகுபதிக்கு இலாகா மாற்றம்.. அதிரடி அறிவிப்பு...