Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu News Live: சுதந்திர தின ஒத்திகையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Tamil Nadu Breaking News Today 7 August 2025, Live Updates: ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

C Murugadoss
C Murugadoss | Updated On: 07 Aug 2025 14:44 PM
Share
Tamil Nadu News Live: சுதந்திர தின ஒத்திகையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
தமிழ்நாடு செய்திகள்

LIVE NEWS & UPDATES

  • 07 Aug 2025 03:24 PM (IST)

    மாநில கல்வி கொள்கை அறிக்கை.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!

    தமிழ்நாட்டிற்கான மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். மாநில கல்வி கொள்கையை உருவாக்க 2022ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டது.

  • 07 Aug 2025 03:05 PM (IST)

    ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட்டுகள்.. 50 சதவிகிதம் தள்ளுபடி!

    டெல்லியை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட்டுகளை ஊபர் செயலி மூலம் பெறுபவர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை 50% அறிமுக தள்ளுபடி வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • 07 Aug 2025 02:48 PM (IST)

    நெல்லையில் கைத்தறி துணிகள் சிறப்பு கண்காட்சி.. விவசாயிகள் கௌரவிப்பு

    தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு திருநெல்வேயில் கைத்தறி துணிகள் சிறப்பு கண்காட்சியானது நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார். மேலும் 75 வயதை தாண்டி நெசவுத்தொழில் செய்து வரும் 3 விவசாயிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

  • 07 Aug 2025 02:32 PM (IST)

    சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி… சென்னையில் போக்குவரத்து மாற்றம்

    சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சிக்காக சென்னையில் ஆகஸ்ட் 8,11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை சாலைகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

  • 07 Aug 2025 02:16 PM (IST)

    மரத்தடி மேகத்திரை சாஸ்தா கோயிலில் ஆடி மாத திருவிழா கோலாகலம்

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரியில் புகழ்பெற்ற மரத்தடி மேகத்திரை சாஸ்தா கோயிலில் ஆடி மாத திருவிழா கொண்டாடப்பட்டது. மண் குதிரையில் எழுந்தருளிய சாஸ்தாவை பக்தர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தங்கள் தோளில் சுமந்து சென்றனர்.

  • 07 Aug 2025 01:58 PM (IST)

    சிறப்பாக பணியாற்றிய 140 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

    திருநெல்வேலியில் காவல்துறை அலுவலர்களான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பாக பணியாற்றிய 140 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஏஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  • 07 Aug 2025 01:43 PM (IST)

    தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

    தூய்மை பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.சென்னையில் நடைபெறும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், திமுக அரசின் துரோகத்தால் சென்னையில் துர்நாற்றம் வீசுவதாக விமர்சித்துள்ளார்.

  • 07 Aug 2025 01:29 PM (IST)

    திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் கேள்வி கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு

    சென்னை திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இளைஞர்களிடம், கேள்வி கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

  • 07 Aug 2025 01:14 PM (IST)

    அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீருடன் கழிவு நீர்.. மக்கள் அவதி

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • 07 Aug 2025 01:00 PM (IST)

    அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்? – பாமக நிறுவனர் ராமதாஸ்!

    என் பிள்ளை அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன் என தெரியவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவருக்கு நல்ல கல்வி கொடுத்து, எம்.பி., மத்திய அமைச்சர் என அழகு பார்த்தேன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க

  • 07 Aug 2025 12:46 PM (IST)

    மத்திய அமைச்சர் ஆசை.. துரை வைகோ பாஜகவுடன் நெருக்கம்!

    மத்திய அமைச்சராகும் ஆசையில் துரை வைகோ பாஜகவுடன் இணக்கமாக இருந்து வருவதாக மல்லை சத்யா குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம் வைகோ வேண்டுமானால் திமுக கூட்டணியை விரும்பலாம். ஆனால் துரை வைகோ  பாஜகவுடன் நெருக்கமாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.

  • 07 Aug 2025 12:32 PM (IST)

    ஆலமரமாக வளர்த்த பாமகவை வெட்ட முயற்சி.. ராமதாஸ் விமர்சனம்

    என்னுடைய கடினமான உழைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி ஆலமரமாக வளர்ந்துள்ளது. தண்ணீருக்கு பதிலாக வியர்வையை ஊற்றி இக்கட்சியை வளர்த்துள்ளேன். ஆலமர கிளையில் இருந்தே கோடாரி செய்து அதனை வெட்ட முயற்சிக்கின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • 07 Aug 2025 12:17 PM (IST)

    கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு வைரமுத்து வெளியிட்ட பதிவு!

    கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    “புகழப்படுவதற்கோ இகழப்படுவதற்கோ உயிர்ப்போடு திகழவேண்டும் ஒரு பொருள்
    இறந்த பிறகும்நீ புகழப்படுகிறாய்மற்றும் இகழப்படுகிறாய்
    என்ன பொருள்?
    உன்னதப் பொருளாக இன்னும் நீ உயிர்ப்போடு திகழ்கிறாய் என்று பொருள்
    இரு இப்படியே
    இறந்த பிறகும் உனக்கு இறப்பில்லை உயிர்ப்பே!” என கூறியுள்ளார்.

    வைரமுத்துவின் பதிவு

  • 07 Aug 2025 12:01 PM (IST)

    பாட்டாளி மக்கள் கட்சியைப் பறிக்க சூழ்ச்சி.. அன்புமணி மீது குற்றச்சாட்டு

    பாட்டாளி மக்கள் கட்சியைப் பறிக்க தனது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணி சூழ்ச்சி செய்வதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். என்னை சந்திக்க வந்ததாக அவர் பொய் சொல்வதாகவும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

  • 07 Aug 2025 11:46 AM (IST)

    ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமனம்.. வெளியான தீர்ப்பு

    ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நியமனம் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • 07 Aug 2025 11:31 AM (IST)

    வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை.. கணவர் குடும்பம் கைது

    திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார் மற்றும் மாமியார் உமாவை நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  • 07 Aug 2025 11:17 AM (IST)

    கொசுவத்தியின் தீப்பொறியால் வந்த விளைவு – பெண் உயிரிழப்பு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிச்சேரி பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவர் கடந்த ஜூன் 13ம் தேதி தனது மனைவி மாரியம்மாள், மகள் கௌசல்யாவுடன் இரவு தூங்கியுள்ளார். அப்போது கொசுவத்தியின் தீப்பொறி காற்றில் மாரியம்மாள் சேலையில் பட்டு தீப்பிடித்தது. இரண்டு மாத சிகிச்சையளித்தும் பலனின்றி மாரியம்மாள் உயிரிழந்தார்.

  • 07 Aug 2025 11:05 AM (IST)

    எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு நீட்டிப்பு!

    எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 30 ஆம் தேதி தொடங்கிய இந்த கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்யும் ஆகஸ்ட் 12ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • 07 Aug 2025 10:51 AM (IST)

    உடுமலை என்கவுண்டர் சம்பவம்.. போலீசார் அளித்த பரபரப்பு விளக்கம்

    உடுமலை எஸ்.எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதனை செய்த குற்றவாளிகளில் ஒருவரான மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் என்ன நடந்தது என காவல்துறை விளக்கமளித்துள்ளது. அதன்படி, கொலைக்கு பயன்படுத்திய அதே அரிவாளை கொண்டு போலீசாரை தாக்க முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 07 Aug 2025 10:37 AM (IST)

    கருணாநிதியின் நினைவு நாள்.. நினைவிடத்தில் முதலமைச்சர் அஞ்சலி

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

  • 07 Aug 2025 10:25 AM (IST)

    இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா!

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 8) கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  • 07 Aug 2025 10:07 AM (IST)

    மக்கள் கூட்டணியில் அதிமுக வெல்லும்- ஈபிஎஸ்

    மேலும் பேசிய அவர், நாங்கள் மக்கள் கூட்டணியில் வெற்றி பெறுவோம். திமுக கட்சி கார்ப்ரேட் கம்பேனியாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களாகிய நீங்கள் சிந்தித்து செயல்படுத்துங்கள், திமுக கட்சி அல்ல கார்ப்ரேட் கம்பேனி என்றார்

    Read more

  • 07 Aug 2025 10:05 AM (IST)

    Edappadi K. Palaniswami Speech : மு.க.ஸ்டாலின் கனவு இனி நிறைவேறாது – ஈபிஎஸ்

    சங்கரன் கோவிலில் பிரச்சாரம் நேற்று பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “   2026 சட்டமன்ற தேர்தலில் மக்களின் முகத்தில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது. அதன்படி, தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். மு.க.ஸ்டாலின் வெற்றி கனவு இனி நிறைவேறாது என்றார்.

  • 07 Aug 2025 09:54 AM (IST)

    குப்பைகளால் வீசும் துர்நாற்றம் – நயினார் பதிவு

    மேலும் குறிப்பிட்டுள்ள நயினார், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட ஆளும் அரசை சேர்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ, முதலமைச்சரோ போராடுபவர்களின் கோரிக்கைகளுக்கு இதுநாள் வரை காது கொடுத்து கேட்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்

    நயினார் பதிவு

    மேலும் படிக்க

  • 07 Aug 2025 09:43 AM (IST)

    துப்புரவு தொழிலாளர்களின் போராட்டம் – நயினார் ஆதரவு

    துப்புரவு தொழிலாளர்களின் போராட்டம் குறித்து பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும், தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளார். சென்னை தலைநகரமே குப்பை கூளத்தால் நிரம்பி கிடக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்

  • 07 Aug 2025 09:28 AM (IST)

    சென்னை தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

    சென்னை மாநகராட்சியின் கழிவு மேலாண்மை தனியார் மயமாக்கத்தை எதிர்த்து 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஐந்து நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • 07 Aug 2025 09:12 AM (IST)

    என்கவுண்டர் நடந்தது எப்படி?

    போலீசார் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமுறைவாக இருந்த மணிகண்டன் சிக்கனூர் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் . அதன் அடிப்படையில் மணிகண்டனை போலீசார் பிடிக்கச் சென்றபோது அவரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

    Read More

  • 07 Aug 2025 09:04 AM (IST)

    திருச்சி விபத்து – சிகிச்சையில் மூன்று பேர்

    கணவன் முருகன் காரை ஓட்டிய நிலையில், மனைவி திலகவதி (வயது 32)  , மகள் அஸ்வினி (வயது 9), மகன் திருக்குமரன் (வயது 4) ஆகியோரும் உடன் பயணித்துள்ளனர். இதில் கர்ப்பிணியான திலகவதி வாய்க்கால் நீரில் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

    Read More

  • 07 Aug 2025 08:50 AM (IST)

    Trichy Car Accident : திருச்சி கார் விபத்து

    திருச்சி துறையூர் அருகே நாமக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் வந்த கார் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த  வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி உயிரிழப்பு

  • 07 Aug 2025 08:35 AM (IST)

    Anbumani Ramadoss : அன்புமணிக்கு எதிராக மனுவில் உள்ளது என்ன?

    மனுவில் , அன்புமணியின் பதவிக்காலம் என்பது 2025 மே 28ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாகவும் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 2025 மே 30ஆம் தேதியிலிருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட நிறுவனருக்கே அதிகாரம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Read More

  • 07 Aug 2025 08:34 AM (IST)

    திருப்பூர் SI கொலை – குற்றவாளி என்கவுண்டர்

    திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 07 Aug 2025 08:23 AM (IST)

    Ramadoss : அன்புமணிக்கு எதிராக ராமதாஸ்

    ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ்   தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

  • 07 Aug 2025 08:14 AM (IST)

    Chennai Rains : சென்னை மழை நிலவரம்!

    சென்னையை பொறுத்தவரை,  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Read More

  • 07 Aug 2025 08:09 AM (IST)

    டெல்டா மாவட்டங்களில் லேசான மழை

    தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வானம் மேக்மூட்டத்துடன் காணப்படுகிறது

  • 07 Aug 2025 07:50 AM (IST)

    நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    ஆகஸ்ட் 8 தேதியான நாளை கோவை, நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

  • 07 Aug 2025 07:40 AM (IST)

    Tamil Nadu Weather : தமிழ்நாடு வானிலை நிலவரம் இன்று

    ஆகஸ்ட் 7ம் தேதியான இன்று கோவை, நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  • 07 Aug 2025 07:27 AM (IST)

    உடல்நிலை குறித்து கேட்டறிந்த ஸ்டாலின்

    ராஜமை நேரில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்,  உடல்நிலை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டு அறிந்தார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

    சந்திப்பு

    Read more

  • 07 Aug 2025 07:06 AM (IST)

    MK Stalin Meets Actress M.N. Rajam : நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

    தனது 90வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டுமென்று ஆசையை தெரிவித்தார். இதனையறிந்த முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்க்காவுடன் வந்து ராஜத்தை சந்தித்தார்.

  • 07 Aug 2025 07:04 AM (IST)

    M.N. Rajam : நடிகை ராஜம் திரையுலக காலம்

    நடிகை ராஜம், தமிழ் திரையுலகில் 1950 முதல் 19 60 வரை முன்னணி நடிகையாக இருந்தவர். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர்,  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

Breaking News in Tamil Today 7 August 2025, Live Updates: 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான் மதிப்பெண் சான்றிதழ், ஆகஸ்ட் 7, 2025 அன்று முதல் வழங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தனித்தேர்வகர்கள் தேர்வெழுதிய மையங்களின் வாயிலாகவும் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை (Power cut today) செய்ப்படவிருக்கிற பகுதிகள் குறித்த விவரங்களை இந்தப் பகுதியில் விவரமாக பார்க்கலாம். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கர நாராயணசாமி திருக்கோவிலில் ஆடித் தபசு திருவிழா ஆகஸ்ட் 7, 2025 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ( school, college leave Today) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகளை இந்த பகுதியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளளலாம். முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களில் அமைதிப் பேரணி ஆகஸ்ட் 7, 2025 அன்று நடைபெறவிருக்கிறது. அதுகுறித்த தகவல்களை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இரண்டாவது கட்ட உரிமை மீட்பு பயணம் ஆகஸ்ட் 7, 2025 அன்று நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். உதவிப் பேராசிரியர் பணிக்கான, தகுதித் தேர்வான செட் தேர்வில் தமிழ் வழியில் பயின்றவர்கள் இட ஒதுக்கீடு கோரும்பட்சத்தில் அதற்கான சான்றிதழை பதிவேற்ற ஆகஸ்ட் 7 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுகுறித்த அப்டேடுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

மேலும் தமிழ்நாடு செய்திகளை தெரிந்துகொள்ள கிளிக் செய்க

Published On - Aug 07,2025 7:02 AM