மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் – 2 நிறுவனங்கள் தேர்வு !
Free Laptop Scheme: கடந்த அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் இந்த திட்டம் முடங்கியது. இதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக (ADMK) ஆட்சி காலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் (Laptop) வழங்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படவிருக்கிறது. இதனையடுத்து கடந்த 2025 முதல் 2026 கல்வியாண்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இந்த நிலையில் லேப்டாப் திட்டத்துக்காக இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இலவச லேப்டாப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள்
வருகிற 2025 – 2026 கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்துக்காக தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டது. இதில் பல நிறுவனங்கள் டெண்டர் வழங்கியிருந்தன. இந்த நிலையில் டெல் (Dell) மற்றும் ஏசர் (Acer) ஆகிய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : தொடர் விடுமுறை… ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. வெளியான முக்கிய அறிவிப்பு




மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகள் குறைந்தது ஒரு வருட உத்தரவாதத்துடன், மேலும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இலவச சர்வீஸை உறுதி செய்ய வேண்டும். மடிக்கணினி, இன்டெல் (Intel) நிறுவனத்தின் i3 1210U, 1215U, 1220P போன்ற புராசஸர்களில் ஏதாவது ஒன்றை அல்லது அதற்கு இணையான திறன் கொண்ட புராசஸரை கொண்டிருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் நிறுவங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
டெல் நிறுவனம் 15.6 இஞ்ச் திரை அளவு கொண்ட ஒரு லேப்டாப் ரூ.40,828 விலையிலும் 14 இஞ்ச் திரை அளவு கொண்ட ஒரு லேப்டாப் ரூ.23,385க்கு தயாரிக்க ஏசர் நிறுவனம் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளன. இதனையடுத்து அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் கொள்முதல் செய்தவற்கனான ஆணை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க : இங்கிலாந்து, ஜெர்மனி செல்லும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.. பயணத்திட்டம் என்ன?
20 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பொறியியல், அறிவியல், வேளாண்மை, மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்த திட்டத்தில் லேப்டாப் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக தற்போது 20 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்படவிருக்கிறது.
மாணவர்களுக்கு குறிப்பாக எளிய பின்னணியில் இருந்த வந்த மாணவர்களுக்கு இந்த இலவச லேப்டாப் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் புரொஜெக்ட்டுகளை செய்ய புரௌசிங் சென்டர் செல்லும் நிலை இதன் மூலம் குறைந்தது. மேலும் கணினி அறிவும் அவர்களுக்கு கிடைத்ததன் காரணமாக திறனும் அதிகரித்தது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட இந்த சேவை தற்போது மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.