AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண்களுக்கு குட் நியூஸ்.. மகளிர் உரிமைத் தொகை விதிகளில் தளர்வு.. இனி ஈஸியா ரூ.1000 கிடைக்கும்

Kalaignar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு மூன்று முக்கிய விதிகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், விதவை ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

பெண்களுக்கு குட் நியூஸ்.. மகளிர் உரிமைத் தொகை விதிகளில் தளர்வு..  இனி ஈஸியா ரூ.1000 கிடைக்கும்
மகளிர் உரிமைத் தொகை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Jun 2025 07:04 AM IST

சென்னை, ஜூன் 29 : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) முக்கிய விதிகளை தமிழ்நாடு அரசு (Tamil Nadu Goverment) தளிர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், மகளிர்  தொகை திட்டம் மூலம் கூடுதல் பெண்கள் பயன்பெறலாம். தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கிற்கே அனுப்பப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை

ஆனால், தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால், 2025 ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதற்காக மாநிலம் முழுவதும் முகாம்கள் செயல்படும் எனவும் 45 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இப்படியான சூழலில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விதிகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது. முக்கிய விதிகளை தமிழக அரசு தளர்த்தி அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் பல பெண்கள் பயன்பெறலாம்.

முக்கிய விதிகளை தளர்த்திய தமிழக அரசு

அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூன்று விதிகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது. முன்னதாக ஓய்வூதியும் பெறும் குடுபங்கள், நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமை பெற தகுதியற்றவர்கள் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது. தற்போது, இந்த விதிகளை தமிழக அரசு தளர்த்தி அவர்கள் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுடையவர்கள் என அறிவித்துள்ளது.

என்னென்ன தளர்வுகள்?

  • அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்த வித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை என்றால், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விதவை ஓய்வூதியம்/ஆதரவற்ற விதிவைகள் ஓய்வூதியம்/ 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் நபர்களை தவிர அக்குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவித தகுதியின்மை வகைப்பாட்டில் வரவில்லை என்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
  • பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி, தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள், இத்திட்ட்த்தின் பிற தகுதிகளை பூர்த்தி செய்து, எந்தவித தகுதியின்மை வகைப்பாட்டில் வரவில்லை என்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow Us