விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மினி டைட்டல் பார்க் – டெண்டர் கோரிய தமிழக அரசு

Mini Tidel Park: தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மினி டைட்டல் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மினி டைட்டல் பார்க் - டெண்டர் கோரிய தமிழக அரசு

மாதிரி புகைப்படம்

Published: 

01 Jan 2026 14:41 PM

 IST

சென்னை, ஜனவரி 1: தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேலும் வளர்த்துத் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், மாவட்டந்தோறும் மினி டைடல் பார்க் அமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி (Tirunelveli), கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஜனவரி 1, 2026 அன்று தற்போது வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில், தகவல் தொழில்நுட்ப புரட்சியின் ஒரு பகுதியாக கடந்த 2000 ஆம் ஆண்டு சென்னை தரமணியில் முதல் டைடல் பார்க் தொடங்கப்பட்டது.

மாவட்டந்தோறும் மினி டைட்டல் பார்க்

சிறப்பான கட்டிட வடிவமைப்பு, நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், உணவகங்கள், வங்கிகள், தபால் அலுவலகம் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த டைடல் பார்க், பல ஐடி நிறுவனங்களுக்கு முக்கிய மையமாக விளங்குகிறது. டிசிஎஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. தரமணியைத் தொடர்ந்து பட்டாபிராம் மற்றும் கோயம்புத்தூரிலும் டைடல் பார்க்கள் தொடங்கப்பட்டன. இதன் பின்னர், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கில் டைடல் நியோ பார்க் மற்றும் மினி டைடல் பார்க் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இதையும் படிக்க : பொங்கல் பரிசுத் தொகுப்பு.. நாளைக்குள் டோக்கன்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.. நியாய விலை கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

தற்போது விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டைடல் நியோ பார்க் செயல்பட்டு வருகின்றன.  அதேபோல், திருப்பூர், வேலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய ஐடி பார்க் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன பெருநகரங்களைத் தாண்டி, டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில், ஓசூர், கரூர், நாமக்கல், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மினி டைடல் பார்க்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாட்டங்களில் மினி டைட்டல் பார்க்

அந்த வகையில், தற்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அந்த மாவட்டங்களில் உள்ள இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மினி டைடல் பார்க் கட்டிடமும் தரைத்தளம் மற்றும் மூன்று மாடிகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பார்க் கட்டுமானத்திற்கும் சுமார் 37 கோடி ரூபாய் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மினி டைடல் பார்க்களும் 18 மாதங்களில் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : நெல்லை வந்தே பாரத் உள்பட 4 ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்த மினி டைடல் பார்க்களில் ஒவ்வொன்றிலும் 500 முதல் 1,000 வரை தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது. இதன் மூலம், உள்ளூர் இளைஞர்கள் சென்னைக்கு அல்லது பிற பெருநகரங்களுக்கு இடம்பெயராமல், தங்களது சொந்த மாவட்டங்களிலேயே ஐடி துறையில் பணிபுரியும் வாய்ப்பு பெறுவார்கள். மினி டைடல் பார்க் திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மாவட்ட அளவிலான சமச்சீர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி சேவைகள் முதல் சிம் கார்டு வரை... புத்தாண்டில் வரவிருக்கும் மாற்றங்கள்
புத்தாண்டை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. கட்டுப்பாடுகள் என்ன?
நாடு முழுவதும் அறிமுகமாகும் பாரத் டாக்ஸி.. இதன் சிறப்பம்சம் என்ன?
நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. 2 ஏசி பெட்டிகள் தீயில் நாசம்!