2025 ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2026 ஜனவரி 1 முதல் பல முக்கிய விதிமுறை மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த மாற்றங்கள் வங்கி சேவைகள், சம்பளம், விவசாயம் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்க உள்ளன. வருகிற 2026 ஜனவரி 1 முதல் வங்கிகளில் பல புதிய விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. சிபில் ஸ்கோர் அப்டேட் இனி பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அல்லாமல் ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படும். இதன் மூலம் கடன் வரலாறு வேகமாக மாற்றம் அடையும். எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்டிஎப்சி உள்ளிட்ட பல வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.