Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Daytime Sleep: பகல் நேரத்திலும் அதீத தூக்கம் வருகிறதா? தூக்கத்தை விரட்டும் செம ஐடியாஸ்!

Sleepiness During The Day: மதிய உணவிற்குப் பிறகு, அதிக உணவு காரணமாக மக்களின் உற்பத்தித்திறன் குறைவது பெரும்பாலும் நிகழும். எனவே, இந்த நேரத்தில் லேசான உணவை எடுத்து கொள்ளலாம். முடிந்தவரை அரிசி மற்றும் தயிர் சார்ந்த உணவைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இவை தூக்கமின்மையை அதிகரிக்கும்.

Daytime Sleep: பகல் நேரத்திலும் அதீத தூக்கம் வருகிறதா? தூக்கத்தை விரட்டும் செம ஐடியாஸ்!
பகல் நேர தூக்கம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Jan 2026 17:27 PM IST

ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் 7 முதல் 8 மணிநேரம் அளவிலான போதுமான அளவு தூக்கம் கொள்வது முக்கியம். இருப்பினும், இப்போதெல்லாம், மக்கள் இரவு வெகுநேரம் வரை தங்களது ஸ்மார்ட் போன்களை (Smart Phone) பயன்படுத்துவதால், மறுநாள் சோர்வடைந்து பகல் நேரங்களில் தூக்கம் (Sleeping) வர தொடங்கும். பெரும்பாலும், எவ்வாளவு வேலை பளு இருக்கும்போது கூட பலரும் தூக்கம் அல்லது சோம்பலை உணர்கிறார்கள், இதனால், வேலை பார்க்கும்போது கவனம் செலுத்துவது கடினம். இதுமாதிரியான பிரச்சனையை நீங்களும் தினம் தினம் சந்தித்தால் உங்கள் வேலையில் சிறப்பாக கவனம் செலுத்தவும், தூக்கத்தைத் தடுக்கவும் உதவும் சில எளிய குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

காபி குடித்தல்:

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும்போது தூக்கம் வருவது இயற்கையான ஒரு விஷயம். இதைத் தவிர்க்க, தூக்கம் வரும்போது ஒரு கப் காபி குடிக்கலாம். காபியில் காஃபின் உள்ளது. இது உடனடியாக தூக்கத்தை விரட்டுகிறது. முடிந்தவரை பால் காபிக்கு பதிலாக ப்ளாக் காபி குடிக்கலாம். ஏனெனில் இது மிகவும் பயனுள்ளதாகவும் உடலை உற்சாகப்படுத்தவும் உதவுகிறது.

ALSO READ: காலையில் எழுந்தவுடன் இந்த தவறுகள்.. நாள் முழுவதும் சோர்வை தரும்!

லேசாக ஏதாச்சும் உணவை எடுத்து கொள்ளலாம்:

மதிய உணவிற்குப் பிறகு, அதிக உணவு காரணமாக மக்களின் உற்பத்தித்திறன் குறைவது பெரும்பாலும் நிகழும். எனவே, இந்த நேரத்தில் லேசான உணவை எடுத்து கொள்ளலாம். முடிந்தவரை அரிசி மற்றும் தயிர் சார்ந்த உணவைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இவை தூக்கமின்மையை அதிகரிக்கும். உங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேலை செய்யும் போது பழங்கள் மற்றும் நட்ஸ் போன்றவை சாப்பிடலாம்.

தொடர்ந்து உட்காருவதைத் தவிர்த்தல்:

நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்தால், உங்கள் உடல் சோம்பலாகவும், சோம்பேறித்தனமாக மாறும். இதைத் தவிர்க்க, அவ்வப்போது எழுந்து நின்று லேசான நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்து, சோம்பலைத் தடுக்கும்.

தொடர்ந்து தண்ணீர் குடித்தல்:

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது உங்கள் உடலை சோம்பலாக உணர வைக்கும். இதைத் தவிர்க்க, நீங்கள் பார்க்கும் கம்ப்யூட்டர் மேஜையில் ஒரு பாட்டிலை வைத்து அவ்வப்போது அதைக் குடிக்கலாம். இது உங்கள் உடலை நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாத்து, தூக்கத்தைத் தடுக்கும்.

ALSO READ: இரவு நல்லா தூக்கம் வரணுமா? 5 நிமிஷம் இப்படி செய்தாலே போதும்!

பாடல்களை கேட்கலாம்:

நீங்கள் வேலை செய்யும் போது தூங்காமல் பாடல் அல்லது இசையைக் கேட்கலாம். தூக்கத்தை போக்க, மெலடி அல்லது சோகமான பாடல்களைத் தவிர்க்கவும். இதற்கு பதிலாக, குத்து அல்லது ஜாலியான பாடல்களைக் கேட்கலாம். இப்படியான இசையைக் கேட்பது உங்கள் மனதைப் புத்துணர்ச்சியடையச் செய்து தூக்கத்தை விரட்டும்.