விசாகப்பட்டினத்தில் இருந்து துவாடா வழியாக எர்ணாகுளம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த டாடாநகர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 29ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு ரயிலில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. ரயிலின் பி1 மற்றும் எம்2 ஏசி பெட்டிகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.