தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓலா, உபர், ராபிடோ ஆகிய தனியாருக்கு சொந்தமான ஒரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செயலிகள் மூலமாக வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இதே போல, சவாரி ஹெய்லிங் மொபிலிட்டி செயலியான பாரத் டாக்ஸி சேவை வரும் ஜனவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த செயலி இருப்பதை உறுதி செய்திருந்தார். இந்த செயலியை சாஹாகர் டாக்ஸி கூட்டுறவு லிமிடெட் இயக்கி வருகிறது.