Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை.. தீபாவளிக்கு சப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு

Tamil Nadu Government : தீபாவளியை முன்னிட்டு முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயனாளிகளின் விரல் ரேகை பதிவு தோல்வி அடைந்தாலும் கையொப்பம் பெற்று வேட்டி, சேலை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

ரேஷன் அட்டைதாரர்களுக்கு  இலவச வேட்டி, சேலை..  தீபாவளிக்கு சப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு
தமிழக அரசு
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Oct 2025 18:59 PM IST

சென்னை, அக்டோபர் 10 : தீபாவளியை முன்னிட்டு முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயனாளிகளின் விரல் ரேகை பதிவு தோல்வி அடைந்தாலும் கையொப்பம் பெற்று வேட்டி, சேலை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2.27 கோடி குடும்பங்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பரிசு பொட்களும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகை 2025 அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. இதனையொட்டி, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, தீபாவளியை முன்னிட்டு முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுஇதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், தீபாவளி பண்டிகைக்கு முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை விநியோகிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலர் தங்களுக்குரிய மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட பட்டியலின் படி, இலவச வேட்டி மற்றும் சேலைகளை கிடங்குகளிலிருந்து தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

Also Read : ‘அப்பாவுக்கு ஏதாச்சி ஆனால் தொலைச்சிடுவேன்’ காட்டமாக சொன்ன அன்புமணி!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை

நியாய விலைக் கடை பணியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட வேண்டும். விரல் ரேகை/கருவிழி ரேகை இருவழியாகவும் சரிபார்ப்பு தோல்வி அடையும் பட்சத்திலும், கையொப்பம் மற்றும் தொலைபேசி மூலம் பயனாளிகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : அதிமுக – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி.. ஒரே வார்த்தையில் ஓபனாக சொன்ன அண்ணாமலை..

 முன்னதாக,   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களுக்கு வீடுகளுக்கே வழங்கப்பட்டது. 2025 அக்டோபர் 4,5ஆம் தேதிகளில் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.