Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீபாவளிக்கு முன் சப்ரைஸ்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள்.. தேதி குறித்த தமிழக அரசு

Thayumanavar Scheme : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாயுமானவர் திட்டத்தில் 2025 அக்டோபர் 5, 6ல் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், முன்னதாகவே தமிழக அரசு ரேஷன பொருட்களை விநியோகம் செய்கிறது.

தீபாவளிக்கு முன் சப்ரைஸ்..  ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள்.. தேதி குறித்த தமிழக அரசு
ரேஷன் பொருட்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 04 Oct 2025 10:10 AM IST

சென்னை, அக்டோபர் 04 :  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 2025 அக்டோபர் 5,6ஆம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஏழை, எளிய  மக்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 37,000 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், 2,27,04,260 குடும்பங்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெறுகின்றன. மேலும், பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பரிசு பொட்களும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 தீபாவளி பண்டிகை 2025 அக்டோர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, ரேஷன் பொருட்களை அதற்கு முன்பாகவே விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. 2025 அகஸ்ட் 12ஆம் தேதி தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் ரேஷன் கடைகளுக்கு வர முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த திட்டம் மூலம்  21 லட்சத்து 76 ஆயிரத்து 454 பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

Also Read : லீவு முடிந்து சென்னை போறீங்களா? சிறப்பு ரயில்கள் இயக்கம்.. மிஸ் பண்ணாதீங்க

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள்


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தாயுமானவர் திட்டத்தில் அக்டோபர் 5, 6ல் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6 தேதிகளில் வீடு தேடி குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read : ஒரு மாதம் டைம்.. செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு காலக்கெடு.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு

இந்த தகவலை அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலகையில் எழுதி முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.