Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீபாவளி போனஸ்.. ரயில்வே ஊழியர்களுக்கு சப்ரைஸ்.. மத்திய அமைச்சரவை அறிவிப்பு

Diwali Bonus For Railway Employees : தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக மத்திய அரசு வழங்க உள்ளது.

தீபாவளி போனஸ்.. ரயில்வே ஊழியர்களுக்கு சப்ரைஸ்.. மத்திய அமைச்சரவை  அறிவிப்பு
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Sep 2025 17:19 PM IST

 டெல்லி, செப்டம்பர் 24 :  ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மொத்தம் 10.91 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,886 கோடி போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நல்ல செய்தி விரையில் மத்திய அரசு வெளியிட உள்ளது. 2024ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. துர்கா பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு போனஸ் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் ஊழியர்களின் உழைப்பு, உற்பத்தித் திறனின் அடிப்படையில் இந்த போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இது பண்டிகை காலத்தில் ஊழியர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்த உதவும்.

இந்த நிலையில் தான், 2025ஆம் ஆண்டு மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு விரைவில் போனஸ் அறிவிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் 78 நாட்கள் ஊதியத்தை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

Also Read : லடாக்கில் வெடித்த வன்முறை.. பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு.. என்ன நடக்கிறது?

10.9 லட்சம் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்


மத்திய அமைச்சரவை முடிவு குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், “இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் முக்கிய அங்கமாக ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கக்கூடிய இருந்தது என்றும், 78 நாட்கள் ஊதியத்தை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.  ரயில்வேயில் பணியாற்றும் 10.9 லட்சம் ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்கப்படும். இதற்காக 1,866 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது” என்று கூறினார்.

Also Read : மின்சார ரயிலின் மேற்கூரையில் பயணம் செய்த முதியவர்.. மின்சாரம் தாக்கி உடல் கருகிய பரிதாபம்!

அரசு அறிக்கையின்படி தீபாவளி போனஸ் ரயில்வேயில் பல்வேறு பதவுகளில் இருக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள், ரயில் நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன்கள், அமைச்சக ஊழியர்கள் மற்றும் பிற குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.