Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பஸ் டிக்கெட் டூ ரேஷன் கார்டு.. வாட்ஸ் அப் வழியாகவே ஈஸியா பண்ணலாம்.. தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு, வாட்ஸ்அப் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகளை அறிமுகப்படுத்த மெட்டாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இதன் மூலம், அரசு சேவைகளை இனி வாட்ஸ் அப் மூலமே செய்து கொள்ளலாம். குறிப்பாக, மின் கட்டணம் செலுத்துவது, குடிநீர் கட்டணம், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

பஸ் டிக்கெட் டூ ரேஷன் கார்டு.. வாட்ஸ் அப் வழியாகவே ஈஸியா பண்ணலாம்.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Aug 2025 12:16 PM

சென்னை, ஆகஸ்ட் 15 : தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து, வாட்ஸ் அப் மூலம் மக்கள் அரசு சேவைகளை பெறும் வகையில், புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் அரசு சேவைகளை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். அதாவது, வாட்ஸ் அப் வழியாகவே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, வரி செல்லுவது, மின்சார கட்டணம் செலுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். அரசு சேவைகள் எளிதாக மக்களுக்கு சென்றடையும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், பல்வேறு திட்டங்களுக்கு மனு குறித்து அதற்கான பலன்களை 10 நாட்களுக்குள் பெறுவது போன்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு முக்கிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவதுதமிழக அரசு வாட்ஸ் அப் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகளை அறிமுகப்படுத்த மெட்டாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மெட்டாவின் ரவி கார்க் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் நடந்தது.

Also Read : ஓய்வூதியம் உயர்வு.. சுதந்திர தினத்தன்று 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

வாட்ஸ் அப் வழியாகவே அரசு சேவைகள்


எனவே, வாட்ஸ் அப் மூலம் ஒரே தொலைபேசிய எண்ணை சாட்பாட்டின் முதல் கட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் 50 அத்தியாவசிய சேவைகள் எந்த நேரத்திலும், எங்கு இருந்து அணுக முடியும். இந்த சாட்பாட் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்த இயலும். அதிகபட்ச அணுகுதலை உறுதி செய்ய டெக்ஸ்ட் வடிவில் சேவைகள் வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் மக்கள் புகார் அளிப்பது, மின்சாரம், குடிநீர் கட்டணங்களை செலுத்துவது, மாநகராட்சி வரிகளை செலுத்துவது, மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்றவற்றை மேற்கொள்ள முடியும். மேலும், அரசு பேருந்து டிக்கெட், ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பிக்க முடியும். ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பம், அட்டைகளில் முகவரி மாற்றம் மற்றும் உறுப்பினர்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல் ஆகியவையும் செய்யப்படலாம்.

Also Read : தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. ஒரு கிலோ இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்

முதற்கட்டமாக 13 அரசு சேவைகள் வாட்ஸ் அப்பிற்கு கெண்டு வரப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களில் 50 சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.இறுதியில் இ-சேவை மையங்களில் வழங்கப்படும் 34,843 சேவைகளையும் வாட்ஸ்அப்பிற்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.