Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை மக்களின் கனவு.. அவிநாசி மேம்பாலம் இன்று திறப்பு.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

Coimbatore Avinashi Flyover : கோவை அவிநாசி உயர்மட்ட மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2025 அக்டோபர் 9ஆம் தேதியான இன்று திறக்கப்படுகிறது. இந்த மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலமாக அவிநாசி மேம்பாலம் திகழ்கிறது. இந்த மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, கோவையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

கோவை மக்களின் கனவு.. அவிநாசி மேம்பாலம் இன்று திறப்பு..  சிறப்பம்சங்கள் என்னென்ன?
அவிநாசி மேம்பாலம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 09 Oct 2025 06:40 AM IST

கோவை, அக்டோபர் 09 : கோவை மக்களின் நீண்டகால கனவான அவிநாசி மேம்பாலம் 2025 அ அக்டோபர் 09ஆம் தேதியான இன்று திறக்கப்படுகிறது. இதன் மூலம், தமிழகத்திலேயே மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் என்ற பெருமையை அவிநாசி மேம்பாலம் பெறுகிறது. இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 9) திறந்து வைக்க உள்ளார். சென்னையை அடுத்து வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்று கோயம்புத்தூர்.  கோயம்புத்தூரிலும் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால்,  கோயம்புத்தூரின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு இல்லாமல் கோவையில் வேலைவாய்ப்புகளை உருவாகும் நடவடிக்கையிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.  கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக, கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த சாலையில் ஐடி நிறுவனங்கள், தொழில்சாலைகள், மருத்துவமனைகள் என அனைத்து இருப்பதால் அதிகமான போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இதனை சமாளிப்பதற்காக பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பவர் அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அவிநாசி மேம்பால திட்டம் அறிவிக்கப்பட்டது. ரூ.1,700 கோடி மதிப்பில் இந்த பாலத்தின் பணிகள் 2020ல் தொடங்கப்பட்டது. கொரோனா காலத்தில் இந்த மேம்பால பணிகள் தாமதமானது.

Also Read : 2024ல் ஏற்பட்ட தகராறு.. இளைஞர் கொலை.. பழிவாங்கிய நண்பர்!

கோவை அவிநாசி மேம்பாலத்தின் சிறப்புகள்


இந்த நிலையில், தற்போது இந்த பாலத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று (அக்டோபர் 9) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. எனவே, கோவை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது. இந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். கோவை அவிநாசி மேம்பாலத்தில் தமிழகத்திலேயே மிக நீண்ட உயர்மட்ட மேம்பாலம் ஆகும். 10.1 கி.மீ நீளம் கொண்ட இந்த மேம்பாலம் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமாக திகழ்கிறது.

Also Read : அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

17.25 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம், 1.5 மீட்டர் உயரமுடையாக உள்ளது. இது தவர சாலையின் இரண்டு பக்கமும் 1.5 மீட்டர் அகலத்துக்கு மழைநீர் வடிகால்கள் மற்றும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம், கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடங்களில் இருந்து 10 நிமிடமாக குறைகிறது. இந்த மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, கோவையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில், கல்வி, சுற்றுலா தரத்தை உயர்த்தும் என கோவை மக்கள் கூறுகின்றனர்.