Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஹோட்டல் ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு – என்ன காரணம்?

Food Safety Mandate : தமிழகத்தில் உள்ள அனைத்து ரெஸ்டாரண்ட்களிலும் உணவு தயாரிக்கும் மற்றும் உணவு பரிமாறும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரும் குடல் காய்ச்சல் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஹோட்டல் ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு – என்ன காரணம்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Nov 2025 18:36 PM IST

சென்னை, நவம்பர் 22: உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மூலமாக காய்ச்சல் (Fever) மற்றும் தொற்று பரவும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுவதைத் தொடர்ந்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை  ஹோட்டலில் உணவு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் அனைத்து ஊழியர்களும் குடல் காய்ச்சல் (Enteric Fever) தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் பெரிய ரெஸ்டாரண்ட்கள் முதல் சிறிய உணவகங்கள் (Hotel) வரை அனைத்து உணவகங்களுக்கும் புதிய உத்தரவுகள் மற்றும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஹோட்டல் ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

கடந்த சில நாட்களாக உணவக ஊழியர்கள் வழியாக காய்ச்சல் மற்றும் தொற்று பரவியதாக பல புகார்கள் வந்துள்ளன. இதனால் அனைத்து ஹோட்டல் ஊழியர்களும், குறிப்பாக ஹோட்டல்களில்  உணவு தயாரிப்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள். அனைவரும் கட்டாயம் குடல் காய்ச்சல் தடுப்பூசி எடுக்க வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஊழியருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக ரூ.500 செலவை ஹோட்டல் உரிமையாளரே வழங்க வேண்டும். தடுப்பூசி போட்ட பின் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்.

இதையும் படிக்க : டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னையில் குடிநீர் மீட்டர் பொருத்தம்.. இதன் பயன்பாடும் முக்கிய அம்சங்களும் என்ன?

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழகத்தில் உணவகங்கள் நடத்தும் அனைத்து உரிமையாளரும் முறையான லைசென்ஸ் பெற்றிருப்பது கடட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தள்ளுவண்டி கடைகளுக்கு கூட இந்த விதி பொருந்தும். மேலும் லைசென்ஸ்களை சரியான முறையில் புதுப்பிக்க வேண்டும். உணவகங்களில் தயாரிக்கும் உணவுகளில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக் கூடாது. மேலும் அனைத்து ஹோட்டல்களும் உணவு பாதுகாப்புத்துறை விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றார்.

உணவு தயாரிக்கும் ஊழியர்கள் காய்ச்சல் அல்லது எந்தவிதமான தொற்றும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். உணவை கையாளும் மற்றும் பரிமாறும் அனைவரும் கையுறை மற்றும் தொப்பி அணிந்திருக்க வேண்டும். மேலும் சமையலறை, உணவுப் பொருட்கள் சேமிப்பு அறை, கை கழுவும் பகுதி, கழிப்பறை ஆகியவை அனைத்து பகுதிகளும் சுத்தமான முறையில் பரமாரிக்க வேண்டும்.

இதையும் படிக்க : கோவை, மதுரைக்கு ஏன் மெட்ரோ இல்லை.. இது தான் காரணம்.. விளக்கம் கொடுத்த மத்திய அரசு..

ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒருமுறை தடுப்பூசி கட்டாயம்

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதாவது, இந்த குடல் காய்ச்சல் தடுப்பூசி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும்.  இதனை பின்பற்றுவது உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பு. இது தொடர்பாக அடிக்கடி உணவகங்களில் சோதனை செய்யப்படும். ஹோட்டல்களில் யாரேனும் தடுப்பூசி செலுத்தாதது தெரிய வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.