’நான் எப்படி காரணம்.. புரியவில்லை’ டிடிவி தினரகன் குற்றச்சாட்டு நயினார் நாகேந்திரன் பதில்

Tamil Nadu BJP Leader Nainar Nagendran : அமமுக பொதுச் செயலார் டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் கொடுத்துள்ளார். தனக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை எனவும், என்னை பற்றி அவர் பேசியது வருத்தமளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

’நான் எப்படி காரணம்.. புரியவில்லை டிடிவி தினரகன் குற்றச்சாட்டு நயினார் நாகேந்திரன் பதில்

நயினார் நாகேந்திரன் - டிடிவி தினகரன்

Updated On: 

08 Sep 2025 14:41 PM

 IST

சென்னை, செப்டம்பர் 08 : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA Alliance) இருந்து விலக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) தான் காரணம் என அமமுக பொதுச் செயலார் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு நயினார் நாகேந்திரன் பதில் கொடுத்துள்ளார். நான் எந்த அடிப்படையில் காரணமாக இருக்கிறேன் என தெரியவில்லை என்றும் டிடிவி தினகரன் என்னை பற்றி இப்படி பேசியிருப்பது வருத்தமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டு முன்பே, அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பாஜக மட்டுமே உள்ளன. வேறு எந்த கட்சிகளும் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை. இதற்கிடையில், அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே சலசலப்புகள் இருந்து வருகிறது.    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முதலில் விலகியவர் ஓ.பன்னீர்செல்வம்.

டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் வந்த பிரதமர் மோடி, ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், பிரதமர் மோடி அதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கு பிறகு, அவர் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகினார். அதோடு, நயினார் நாகேந்திரன் தான் தன்னை சந்திக்க வைக்கவில்லை என்று கூறினார். தனக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை எனக் கூறி பாஜகவுடனான உறவை துண்டித்துக் கொண்டார். தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். இதற்கு காரணம், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தான் என குற்றச்சாட்டி வருகிறார்.

Also Read : செங்கோட்டையன் பதவி பறிப்பு.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்!

அதாவது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறக் காரணமே நயினார் நாகேந்திரன் தான். அவர் உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியே வேறு விதமாக பேசுகிறார். அகங்காரம் மற்றும் ஆணவத்துடன் நயினார் நாகேந்திரன் செயல்படுகிறார். எங்களை கூட்டணியில் இருந்து நீக்க அவர் திட்டமிட்டு இருந்தார்” என கூறினார். இதற்கு தற்போது நயினார் நாகேந்திரன் பதில் கொடுத்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் பதில்

திருநெல்வேலியில் 2025 செப்டம்பர் 08ஆம் தேதியான இன்று செய்திளார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவராக ஈபிஎஸ்-யை அறிவித்தார் அமித்ஷா. நான் அறிவிக்கவில்லை. அகில இந்திய தலைமை சொல்வதை கேட்பதுதான் எனது பொறுப்பு.

பலமுறை பேசிய போதும் டிடிவி தினகரன் என்னிடம் எந்த கருத்தையும் சொல்லவில்லை. டிடிவி தினகரன் திடீரென என் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது தெரியவில்லை. அண்ணாமலை, ஓ.பன்னிர்செல்வத்தை ஏற்கவில்லை என டிடிவி தினகரன் சொல்கிறார். ஓ.பன்னீர்செல்வம் முதல் வேட்பாளராக வெற்றி பெற வேண்டும் என நெல்லை மாநாட்டில் அண்ணாமலை நேரடியாக அறிவித்தார்.

Also Read : மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம் – வைகோ அறிவிப்பால் பரபரப்பு

அனைவரும் ஒன்றாக இருந்தால் தான், எதிரியை வீழ்த்த முடியும். டிடிவி தினகரன் பேசியது மன வருத்தத்தை தருகிறது. டிடிவி தினகரனுடன் எந்த கருத்து வேறுபாடுகளும் இருந்தது கிடையாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எங்களுடன் இல்லை. அமமுக தான் இருந்தது. சிறிய கட்சி, பெரிய கட்சி என்பது முக்கியம் இல்லை. கூட்டணி தான் முக்கியம்” என்று கூறினார்.