கிருஷ்ணகிரியில் தெருக்கூத்து கலைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை..

Street Artist Killed: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெருக்கூத்து கலைஞர் வெங்கடேசன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது சின்னநரசிம்மன் என்பவரால் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பகல்நேரத்தில் நடுரோட்டில் நடந்த இந்த கொலை, பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் தெருக்கூத்து கலைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை..

கிருஷ்ணகிரியில் தெருக்கூத்து கலைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை

Published: 

16 Jun 2025 06:37 AM

 IST

கிருஷ்ணகிரி ஜூன் 16: கிருஷ்ணகிரியில் (Krishnagiri) பல ஆண்டுகளாக தெருக்கூத்து கலைஞராக பணியாற்றிய வெங்கடேசன் (Street Artist Venkateshan) , 2025 ஜூன் 15ஆம் தேதி பகல் நேரத்தில் ரவுண்டானா அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சின்னநரசிம்மன் என்பவர் அவரை கத்தியால் கழுத்தும் முகத்திலும் வெட்டி தாக்கினார். தாக்குதலில் ரத்த வடியும் நிலையில் சாலையில் விழுந்த வெங்கடேசனை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பகல் நேரத்தில் நடுரோட்டில் நிகழ்ந்த இந்த கொலை(Muder on Road), அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. தாக்கிய சந்தேக நபர் சின்னநரசிம்மனை போலீசார் விரைவாக கைது செய்துள்ளனர்.

தெருக்கூத்து கலைஞரான வெங்கடேசன்

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே உள்ள தேசுப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). இவர் பல ஆண்டுகளாக கிருஷ்ணகிரி நகரில் தெருக்கூத்து கலைஞராக பணியாற்றி வந்தார். பாரம்பரிய கலை forms ஒன்றான தெருக்கூத்து மூலம் பல்வேறு கிராமங்களில் மற்றும் விழாக்களில் கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2025 ஜூன் 15 ஆம் தேதி மதிய நேரத்தில், வெங்கடேசன் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ரவுண்டானா சந்திப்புக்கு அருகே பயணித்து கொண்டிருந்தார். அச்சமயத்தில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த வேப்பனப்பள்ளி அருகேயுள்ள குருவரெட்டிபோடூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னநரசிம்மன் என்பவர், வெங்கடேசனை திடீரென மோதியபடி, அவரது முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கூரிய கத்தியால் பலமுறை வெட்டினார்.

தெருக்கூத்து கலைஞர் பகல் நேரத்தில் நடுரோட்டில் வெட்டிக்கொலை

அதிர்ச்சிக்குரிய இந்த தாக்குதலில், வெங்கடேசன் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்தார். ரத்த வடியும் நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட அவரை துரிதமாக தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், “வெங்கடேசன் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்” என அறிவித்தனர்.

பட்ட பகலில் நடந்த கொலையால் மக்கள் அதிர்ச்சி

இந்த கொலை சம்பவம் நடுரோட்டில், பொதுமக்கள் நடமாடும் பகலில் நிகழ்ந்ததால், அப்பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனிடையே, சம்பவத்திற்கு பிறகு தப்பிச் சென்ற சின்னநரசிம்மனை போலீசார் விரைந்து கைது செய்தனர். கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விரிவாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம், மக்கள் நடமாடும் நேரத்தில் நடுரோட்டில் அரங்கேறியதால், கிருஷ்ணகிரி நகரத்திலும், அருகிலுள்ள பகுதிகளிலும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Related Stories
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
சென்னை எழும்பூரில் வரப்போகுது மெகா அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்… எப்போது தெரியுமா?
20 நாட்களுக்கான கையிருப்பில் வீட்டு சிலிண்டர்கள்.. விற்றுத் தீர்ந்த வணிக சிலிண்டர்கள்.. சென்னையில் ஹோட்டல்கள் மூடல்..
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..
பழங்களில் எலி மருந்து தடவும் சாலையோர வியாபாரி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ