ஆயுத பூஜை விடுமுறை… – முன்பதிவில்லாத 2 ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு – எப்போது தெரியுமா?
Special Trains: தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என தொடர் விடுமுறை வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஏதுவாக தென்னக ரயில்வே இரண்டு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பொதுவாக பேருந்துகளைக் காட்டிலும் ரயில்களில் (Train) பயணிப்பதற்கு கட்டணம் குறைவு. அதே நேரம் மிகவும் வசதியாகவும் பயணிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு மக்கள் ரயில் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். ஆனால் ரயிலில் டிக்கெட் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் பண்டிகை காலங்களில் டிக்கெட் கிடைப்பதற்கு சாத்தியங்கள் குறைவு. பெருமபாலும் மக்கள் முன்பதிவு முறையில் டிக்கெட் புக் செய்து பயணிப்பர் என்பதால் அவசர காலகட்டங்களில் நமக்கு டிக்கெட் கிடைக்காது. மேலும் பண்டிகை காலங்களில் பேருந்துகளில் கட்டணம் உயர்வாக இருக்கும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அக்டோபர் 1, 2025 மற்றும் அக்டோபர் 2, 2025 ஆகிய இரு தினங்கள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இரண்டு நாட்கள் விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக வருவதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க விரும்புவர். ஆனால் அந்த நேரங்களில் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் வழக்கமான நாட்களை விட அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக இரண்டு ஸ்பெஷல் ரயில்களை தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : அவசர காலங்களில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்க முடியுமா? உண்மை என்ன?




ஆயுத பூஜைக்கு இரண்டு சிறப்பு ரயில்கள்
ஆயுத பூஜையை ஓட்டி சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செப்டம்பர் 30, 2025 அன்று முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 30, 2025 அன்று இரவு சரியாக 11.45 மணி அளவில் புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி வழியாக மதுரைக்கு அக்டோபர் 1, 2025 அன்று காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும்.
மேலும் ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு செப்டம்பர் 30, 2025 அன்று சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை தாம்பரத்தில் இருந்து நாளை மாலை சரியாக 04.15 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், அரியலூர், திருச்சி, மதுரை வழியாக அக்டோபர் 1, 2025 அன்று அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மதுரை மார்க்கமாக செல்பவர்கள் இந்த இரண்டு ரயில்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிக்க : ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு.. வருது புது ரூல்ஸ்!
இதற்கு முன்பதிவு செய்ய தேவையில்லை என்பதால் மக்கள் நேரடியாக ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்து பயணிக்க முடியும். குறிப்பாக சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். ஆனால் இதில் மற்ற ரயில்களைக் காட்டிலும் கூட்டம் அதிகம் இருக்கும். இருப்பினும் அவசர காலகட்டங்களில் பயணிக்க இந்த ரயில்கள் ஏதுவாக இருக்கும்.