Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. ரயில் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை!

Southern Railway Warning: தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில், ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. ரயில்களில் பட்டாசு, தீக்குச்சிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனங்கள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்வது கடும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. ரயில் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை!
ரயில் பயணம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 29 Sep 2025 08:23 AM IST

தமிழ்நாடு, செப்டம்பர் 29: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பொதுவான விசேஷ நிகழ்வாகும். இந்த நாளில் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்வார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் பணியாற்றி வரும் பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார்கள். 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை வரும் நிலையில் இரு தினங்கள் முன்பாகவே அதாவது அக்டோபர் 16ஆம் தேதி முதலே பயணங்கள் தொடங்கி விடும். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் ஆகியவையும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு ரயிலில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்துச் செல்லும் பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பாக ரயில்களில் விபத்துகளை ஏற்படுத்தும் பொருள்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை விதிகளை அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

அந்த வகையில் அடுப்புகள் எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், கழிவறை சுத்தம் செய்யும் அமிலம், பெட்ரோல், டீசல், சிகரெட் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வதற்கு தடை உள்ளது. ஆனால் தீபாவளியை முன்னிட்டு பொதுப்போக்குவரத்தில் செல்லும் மக்கள் சிலர் தெரியாமலும், அறியாமையிலும் பட்டாசு போன்ற எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Also Read: ரயில் நிலையத்தில் வெயிட் பண்ணுறீங்களா? இனி அபராதம் தான்.. வெளியான முக்கிய தகவல்

ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். விதிகளை மீறும் பயணிகளுக்கு எச்சரிக்கையும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அபராதம் அல்லது சிறை தண்டனை

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த தகவலின் படி, ரயிலில் எழுத தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது தடை உள்ளதை அறிந்த பெரும்பாலான பயணிகள் அதனை பின்பற்றி வருகின்றனர். ஆனால் சிலர் எடுத்து செல்கின்றனர். இது பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்புகிறது. எனவே தடை செய்யப்பட்ட பொருட்களை முதல் முறையாக ரயிலில் எடுத்து செல்வது பிடிப்பட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

Also Read: ஏசி மின்சார ரயிலில் போறீங்களா? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

அவர்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை ரூபாய் 5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.