கணவன் – மனைவி தகராறு.. குறுக்கே வந்த மாமனார்.. திடீர் துப்பாக்கி சத்தம்.. அடுத்த நடந்த சம்பவம்!

Tirupattur Crime : திருப்பத்தூர் மாவட்டத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் குறுக்கிட்ட மாமனாரை அவரது மருமகன் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாேலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவா நபரை தேடி வருகின்றனர்.

கணவன் - மனைவி தகராறு.. குறுக்கே வந்த மாமனார்.. திடீர் துப்பாக்கி சத்தம்.. அடுத்த நடந்த சம்பவம்!

மாமனாரை சுட்டு கொன்ற மருமகன்

Published: 

04 Apr 2026 15:45 PM

 IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த பிரித்திகா என்ற பெண்ணை சதீஷ் 2- ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பிரித்திகாவுக்கு முதலாவது ஒரு ஆண் குழந்தையும், 2- ஆவது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், பெண் குழந்தை வேண்டாம் என்று பிரித்திகாவுடன், சதீஷ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது, அவர்களிடையே மிகப்பெரிய வாக்குவாதமாக மாறி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், பிரித்திகாவை குழந்தைகளுடன் அவர்கள் தாய் வீட்டுக்கு சதீஷ் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்ததாக தெரிகிறது. மேலும், சதீஷ் அவ்வப்போது பிரித்திகாவின் தாய் வீட்டுக்கு சென்று ஆண் குழந்தையை தன்னிடம் தருமாறு வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கணவன்- மனைவி இடையே தகராறு

இதனால், கணவன் மனைவி இடையேயும், சதீஷ் மற்றும் அவரது மாமனார் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், மது போதையில் சதீஷ் வழக்கம் போல பிரித்திகாவின் தாய் வீட்டுக்கு நேரில் சென்று ஆண் குழந்தையை தன்னிடம் தருமாறு தகராறு செய்துள்ளார். அப்போது, பிரித்திகாவின் தந்தை ரவி இதனை தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால், ரவிக்கும், சதீஷுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

மேலும் படிக்க: வங்கி லாக்கரில் இருந்த 2 கிலோ தங்க நகைகள் நூதன கொள்ளை.. சிக்கிய பெண்.. சென்னையில் பரபரப்பு..

மாமனாரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட மருமகன்

இதில், ஆத்திரம் அடைந்த சதீஷ் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து ரவியை நோக்கி சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில், குண்டு பாய்ந்ததில் ரவி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரவியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், ரவியின் சடலம் உடல் கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தலைமறைவான நபருக்கு போலீஸ் வலைவீச்சு

இந்த சம்பவம் தொடர்பாக, ரவி குடும்பத்தினர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சதீஷை தேடி வருகின்றனர். மேலும், அவரது செல்போன் சிக்னல்கள் மூலம் அவரை கண்டறியும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடும்ப தகராறில் நாட்டு துப்பாக்கியால் மாமனாரை, மருமகன் சுட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து… பயணிகள் அவதி

Follow Us
ரயில் டிக்கெட் ரத்து செய்வதில் புதிய மாற்றம் - இனி முழு கட்டணமும் திரும்ப கிடைக்காது!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்
துல்கர் சல்மானுடன் மோதலா? டோவினோ தாமஸ் அதிரடி பதில்!
மீண்டும் சரிந்த தங்கம் விலை.