AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… பள்ளி மாணவரின் வக்கிர செயல்… நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

Nagercoil Crime: நாகர்கோவில் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்து வந்த 88 வயது மூதாட்டியை 9-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் பாலியல் வன்கொடும செய்தார். இது தொடர்பான புகாரின் பேரில், வடசேரி போலீசார் வழக்குப் பதிந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… பள்ளி மாணவரின் வக்கிர செயல்… நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!
நாகர்கோவிலில் பள்ளி மாணவர் கைதுImage Source: social media
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 03 Apr 2026 08:38 AM IST

நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியை சேர்ந்தவர் 88 வயது மூதாட்டி. இவரது இரு மகன்களுன் உயிரிழந்து விட்ட நிலையில், தனது 2- ஆவது மருமகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவரது மருமகள் மட்டும் தனியாக கடைக்கு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, அப்போது மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மருமகள் மூதாட்டியை எழுப்பி விசாரித்தார். அப்போது, பிற்பகலில் திடீரென ஒரு நபர் வீட்டுக்குள் புகுந்தார். உடனே, அந்த நபர் எனது வாயில் துணியை வைத்து அடைத்து கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், என்னை தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதில், நான் மயங்கி விட்டேன் என்று அந்த மூதாட்டி தெரிவித்தார்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மருமகள், மூதாட்டி மீட்டு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, மூதாட்டி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மூதாட்டியின் மருமகள் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், மூதாட்டியின் வீட்டின் அருகே உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.

மேலும் படிக்க: திமுக–பாஜகவை நம்பாதீர்கள்; என்னை 100% நம்புங்கள்.. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – திருச்சியில் விஜய் பரப்புரை..

மூதாட்டியின் வீட்டின் அருகே வசித்து வரும் சிறுவன்

இதில், ஒரு சிறுவன் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து சென்றது பதிவாகி இருந்தது. இது தொடர்பாக, அந்த சிறுவன் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அந்த சிறுவன் மூதாட்டியின் வீட்டின் அருகே 4 வீடுகள் தள்ளி வசித்து வந்தது தெரியவந்தது. மேலும், அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்ததில், இந்த வக்கிர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த சிறுவன் அரசு பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

இதை தொடர்ந்து, அந்த சிறுவன் மீது போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து திருநெல்வேலி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். 9- ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், போலீசாரால் அந்த சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவமும் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: இன்று முதல் பகலில் வெயில் சுட்டெரிக்கும்.. மாலையில் மழை கொட்டும்.. வானிலை அப்டேட் இதோ!!

Follow Us