திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நாளை SIR பணிகள் தொடக்கம்!
SIR work to begin tomorrow: அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் செவிசாய்க்குமா என்பது தெரியாத நிலையில், தமிழகத்தில் SIR பணிகள் நாளை தொடங்க உள்ளன. இதனால், தமிழக அரசு திட்டமிட்டபடி உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சென்னை, நவம்பர் 03: தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி, 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணியை, இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி நாளை தொடங்க உள்ளது. முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் SIR (Special Intensive Revision) பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கொண்டு வந்தது ஏற்க இயலாது என்று கூட்டாக தெரிவித்துள்ளன. எனினும், இந்திய தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையம் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு:
முன்னதாக, பீகாரில் நடந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தன. எனினும், நேர்மையான முறையில் பணிகள் நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில், நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம். இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அதற்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க: வாக்காளர் சிறப்பு திருத்தம்.. தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்..
அதை செய்யாமல், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இதன் காரணமாக நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு:
இதைத்தொடர்ந்து, அந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, எஸ்ஐஆர் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்து கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை வெளிப்படையாக கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்பு, SIR நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
திட்டமிட்டபடி நாளை SIR பணிகள் தொடக்கம்:
எனினும், இந்த கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாத இந்திய தேர்தல் ஆணையம், திட்டமிட்டபடி பீகாரைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடங்குவதற்கான முனைப்பில் இருப்பதாக தெரிகிறது. அதன்படி, தமிழகத்தில் நாளை இதற்கான பணிகள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தொடங்க உள்ளது.
மேலும் படிக்க: கரையானை போல் இபிஎஸ் அதிமுகவை அரித்துக்கொண்டிருக்கிறார்: சேகர் பாபு விளாசல்!
தொடர்ந்து, நாளை முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை, வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளுடன் இணைந்து, அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன.



