திடீரென ஊருக்குள் புகுந்த நச்சுப்புகை.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்.. 90 பேருக்கு சிகிச்சை!
Cuddalore SIPCOT : கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறி ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால், அங்கிருந்த மக்களை அதனை சுவாசித்ததால், அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சுமார் 90க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

கடலூர், செப்டம்பர் 06 : கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் இருந்து கசிந்த நச்சுப்புகையால் 90க்கும் மேற்பட்ட மக்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நச்சிப்புகையை சுவாசித்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூரர் சிதம்பரம் சாலையில் சிப்காட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழில்சாலையில் பல்வேறு ரசாயண தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த சிப்காட் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருக்கும் தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திடீரென ஊருக்குள் புகுந்த நச்சுப்புகை
அப்படியொரு சம்பவம் தான், தற்போது நடந்துள்ளது. அதாவது, கடலூர் சிப்காட் தொழில்சாலையில் இருந்து கசிந்த நச்சுப்புகையால் 90க்கும் மேற்பட்ட மக்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிப்காட் ஆலையில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான நேற்று 10.15 மணியளவில் நச்சுப்புகை வெளியேறி இருக்கிறது. அலகிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறத் தொடங்கியதைத் தொடர்ந்து சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுக்புகை அருகில் இருந்த குடிகாடு கிராமம் முழுவதும் பரவியது. அந்த கிராமம் முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதனால், பீதியடைந்து மக்கள் வெளியேறினர். சில நேரத்திலேயே அப்பகுதி மக்களுக்கு கண் ஏரிச்சல், மூச்சித் திணறல், இருமல் ஏற்பட்டு, அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.




Also Read : வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பாமக பிரமுகர்.. தஞ்சையில் பதற்றம்
90 பேர் மருத்துவமனையில் அனுமதி
இதனால், அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். இதுகுறித்து போலீசாருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மயங்கி விழுந்த அனைவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுமார் 90க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை அடுத்து, கடலூர் சிதம்பரம் சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தொழிற்சாலையில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அணு உலையுடன் இணைக்கப்பட்ட குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். புகை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறினார். காவல்துறையினரும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்கான காரணத்தை விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.
Also Read : 3 குழந்தைகளை கொன்ற தந்தை.. பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்.. ஆந்திராவில் ஷாக்
கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சந்தித்தார். ரசாயனங்கள் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.