Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gummidipoondi School Incident: தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய நச்சுப் புகை.. துடித்துப்போன பள்ளி மாணவிகள்.. என்ன நடந்தது..?

Student Suffocation: கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள அரசுப் பள்ளியில் நான்கு மாணவிகள் திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Gummidipoondi School Incident: தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய நச்சுப் புகை.. துடித்துப்போன பள்ளி மாணவிகள்.. என்ன நடந்தது..?
பள்ளி மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 26 Aug 2025 19:59 PM

கும்மிடிப்பூண்டி, ஆகஸ்ட் 26: திருவள்ளூர் அடுத்த கும்மிடிப்பூண்டி (Gummidipoondi) அருகே அரசு பள்ளியில் படித்த 4 மாணவிகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட 4 பள்ளி மாணவிகளை (School Students) அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். தற்போது மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆலைகளில் இருந்து வெளியேறிய நச்சு புகைகளால்தான் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன நடந்தது..? முழு விவரம்:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிப்பூண்டி அடுத்த சித்தராஜா கண்டிகை பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கியுள்ளது. வழக்கம்போல் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 26ம் தேதி பள்ளி இயங்கி வந்தநிலையில், 4 மாணவிகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ALSO READ: மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறித்த ஊழியர்.. பயத்தில் நகையை விழுங்கியதால் அதிர்ச்சி!

பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளான சுருதி, காயத்ரி, யுவஸ்ரீ மற்றும் தாருக்கேஸ்வரி ஆகிய 4 மாணவிகளும் உணவு இடைவேளைக்கு பிறகு, சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் சக பள்ளி மாணவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது, மூச்சுத்திணறலால் அவதிக்கப்பட்ட மாணவிகள் கோட்டைக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை கொடுத்துள்ளனர்.

மூச்சுத்திணறலுக்கு காரணம் என்ன..?

அரசு உயர்நிலைப் பள்ளியை சுற்றி அதிக நச்சுத்தன்மை கொண்ட வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகிறது. இதன் காரணமாகவே மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், இதுகுறித்து பலமுறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ALSO READ: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. துடிதுடித்து பறிபோன இரு உயிர்.. சென்னையில் சோகம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு அனுமதி பெறாமல் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை இயங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகமோ அல்லது சுற்றுசூழல் துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.