மாணவர்களே ரெடியா? முடிந்தது கோடை விடுமுறை.. இன்று முதல் பள்ளிகள் திறப்பு..
வடகடலோர தமிழகத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல கடும் அவதிக்கு உள்ளாகக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, பள்ளிகள் மூன்று நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
ஜூன் 4, 2026: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்த சூழலில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்த ஆண்டு கோடை விடுமுறை சற்று முன்னதாகவே தொடங்கியது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கோடை விடுமுறை ஏப்ரல் 16ஆம் தேதி வாக்கில் தொடங்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை தாமதமாக திறக்க வேண்டும் என கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு:
இதனை கருத்தில் கொண்டு, தமிழக முழுவதும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் ராஜமோகன் அறிவித்திருந்தார். தமிழகத்தைப் பொறுத்தவரையில், கோடை வெயில் உச்சத்தில் இருந்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வந்தாலும், வடகடலோர தமிழகமான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், சேலம், கடலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெப்பம் தொடர்ந்து பதிவாகி வருகிறது. அதேபோல், ஒரு சில பகுதிகளில் வெப்பக் காற்றும் வீசி வருகிறது.
வடகடலோர தமிழகத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல கடும் அவதிக்கு உள்ளாகக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, பள்ளிகள் மூன்று நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
பாடநூல், நோட்டுப் புத்தகங்கள் விநியோகம்:
பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, வளாக பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதைத்தவிர, முதல் நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்குவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: சென்னையில் பொளக்கும் வெயில்.. குமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. எங்கெல்லாம் கனமழை இருக்கும்?
மேலும், புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை, மாணவர்கள் இதற்கு முன்பு பயன்படுத்திய பழைய அட்டைகளையே கொண்டு பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் சூழலில், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் புதிய கல்வியாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.