Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தான் ஏற்க வேண்டும்…சசிகலா!

People Choice To Accept AIADMK BJP Alliance: தமிழகத்தில் அதிமுக - பாரதீய ஜனதா கூட்டணியை தமிழக மக்கள் தான் ஏற்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தான் ஏற்க வேண்டும்…சசிகலா!
அதிமுக பாஜக கூட்டணியை மக்கள் தான் ஏற்க வேண்டும்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 24 Dec 2025 13:08 PM IST

இது தொடர்பாக வி. கே. சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2021- ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பு ஏற்கும் போது, தமிழகத்தில் ரூ. 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி கடன் இருந்தது. ஆனால், தற்போது, இந்த கடன் தொகை இரட்டிப்பாகி ரூ. 10 லட்சம் கோடியாக மாறி உள்ளது. இது திமுக ஆட்சியில் செய்யப்பட்ட மிகப் பெரிய சாதனை ஆகும். வார்த்தைக்கு வார்த்தை திராவிட மாடல் ஆட்சி என்று கூறும் திமுகவினர், அதனை கூறுவதற்கு சிறிதளவும் தகுதி இல்லாதவர்கள் ஆவர். அண்மையில் வெளியான சிஏஜி அறிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பொதுத்துறை நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட 5 மடங்கு கடன் அதிகமாக வாங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய துறைகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு கடன்

இது தவிர, மின்சாரத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் ரூ. 2 லட்சம் கோடிக்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவி ஏற்ற பிறகு தமிழகத்தில் ரூ. 12 லட்சம் கோடியாக கடன் உயர்ந்துள்ளது. இதற்கு மாதம் தோறும் ரூ. 6000 கோடி வட்டி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று கூற திமுகவினருக்கு தகுதி இல்லை. திராவிட மாடல் என்று கூறுவதற்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரிமை உள்ளது.

மேலும் படிக்க: அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை.. கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க இபிஎஸ் ஒப்புதல்?

திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்பட வேண்டும்

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்த பெருமைக்கு சொந்தக்காரர் திமுக மட்டுமே. எனவே, இந்த அரசுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் முடிவு கட்டப்பட வேண்டும். எம் ஜி ஆர் இருந்த காலத்தில் 13 ஆண்டுகள் திமுக தேர்தலில் வெற்றி பெறாமல் இருந்தது. அடுத்து ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 20 ஆண்டுகள் திமுக தலை தூக்காமல் இருந்தது. தற்போது, அரசியல் ரீதியான செயல்பாடுகளில் அதிமுக தவறு செய்ததன் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தான் ஏற்க வேண்டும்

தமிழகத்தில் ஸ்டாலின் பெயரில் திட்டங்களை அறிவித்து விளம்பரம் செய்துவிட்டு அப்படியே செல்கின்றனர். தமிழக மக்களுக்காக முதலில் குரல் கொடுக்கும் நபர் நானாக இருப்பேன். அதிமுக பாஜக கூட்டணியை மக்கள் தான் ஏற்க வேண்டும். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட டைட்டன் வாட்ச் கம்பெனியில் அரசு சார்பில் சிறிய முதலீடு பங்கு வாங்கி வைக்கப்பட்டது.

ரூ.85 ஆயிரம் கோடி சேர்த்து வைத்த எம்ஜிஆர்

தற்போது, இதன் மதிப்பானது ரூ. 85 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த பணம் எல்லாம் தமிழக மக்களுக்காக எம் ஜி ஆர் சேர்த்து வைத்ததாகும். ஓசூரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தென்காசி-தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்…பரபரப்பு பின்னணி!