ரயில்களில் அட்டகாசம் செய்யும் எலிகள்.. ‘பொறி’ வைத்து பிடிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை..

எலிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே எடுத்து வருகிறது. அவ்வாறு, பிடிபடும் எலிகளைச் சாகடிக்காமல், அவற்றை ரயிலில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் முறையை ரயில்வே கடைபிடிக்கிறது. குறிப்பாக உணவு தயாரிக்கும் பெட்டிகளில் பூச்சி கட்டுப்பாடு (Pest Control) நடவடிக்கைகள் வழக்கத்தை விட தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில்களில் அட்டகாசம் செய்யும் எலிகள்.. ‘பொறி’ வைத்து பிடிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை..

ரயில்களில் எலி

Published: 

25 Feb 2026 14:18 PM

 IST

சென்னை, பிப்ரவரி 25: தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் சமீபகாலமாக எலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது பயணிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுக்க தெற்கு ரயில்வே தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் ரயில்களில் பயணிகள் பெரும்பாலும் தங்களது உறவினர்களுக்காக அல்வா போன்ற இனிப்பு வகைகள், தின்பண்டங்கள் மற்றும் பழங்களை துணிப்பைகளிலும், கட்டப்பைகளிலும் எடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை.. அதிரடி தீர்ப்பு!!

பயணிகள் இந்தப் பைகளை தங்களது இருக்கைக்கு அடியிலோ அல்லது சரக்கு வைக்கும் இடங்களிலோ வைக்கின்றனர். உணவின் வாசனை எலிகளை எளிதில் ஈர்ப்பதால், அவை பைகளைக் கடித்துக் குதறுவதுடன், பயணிகளின் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் தோல் பைகளையும் சேதப்படுத்துகின்றன. இது தொடர்கதையானதை அடுத்து, பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் முறையான புகார்களை அளித்தனர்.

ரயில்வே நிர்வாகத்தின் நவீன தீர்வுகள்:

பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வே எலிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை பேசின் பிரிட்ஜ் பணிமனையில் ‘பியூமிகேசன் சேம்பர்’ என்ற நவீன எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்களில் உள்ள எலிகள் மற்றும் மூட்டைப் பூச்சிகள் முழுமையாக ஒழிக்கப்படுகின்றன.

ரயில் பெட்டிகளில் எலிப் பொறிகள்:

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய முக்கிய நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படும்போது, உணவு தயாரிக்கும் பெட்டிகள் (Pantry Cars) மற்றும் பயணிகளின் பெட்டிகளில் எலிப் பொறிகள் வைக்கப்பட்டு எலிகள் பிடிக்கப்படுகின்றன. அவ்வாறு, பிடிபடும் எலிகளைச் சாகடிக்காமல், அவற்றை ரயிலில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் முறையை ரயில்வே கடைபிடிக்கிறது. குறிப்பாக உணவு தயாரிக்கும் பெட்டிகளில் பூச்சி கட்டுப்பாடு (Pest Control) நடவடிக்கைகள் வழக்கத்தை விட தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தரக்கட்டுப்பாடும் கண்காணிப்பும்:

எலி ஒழிப்புப் பணிகளைச் செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள் சரியாகச் செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பணியில் தொய்வு ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

இதையும் படிக்க: குடும்பத்தையே சீர்குலைத்த புற்றுநோய்.. மனைவி மீதான அதீத பாசத்தால் விபரீத முடிவு.. தந்தை, மகன் பலி!!

பயணிகளுக்கான வேண்டுகோள்:

உணவுப் பொருட்களைக் காற்றுப்புகாத டப்பாக்களில் (Airtight Containers) வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். ரயில் பெட்டிகளுக்குள் மற்றும் இருக்கைக்கு அடியில் குப்பைகளையும், உணவு மீதிகளையும் வீசக்கூடாது. பராமரிப்பு தொடர்பான புகார்களை 139 என்ற உதவி எண் அல்லது RailMadad செயலி மூலம் உடனுக்குடன் தெரிவிக்கலாம்.

Follow Us
தீவிரவாதிகளை வீழ்த்த உதவிய ராணுவ நாய் டைசன்
‘எல் மேன்சோ’ கொலைக்கு பின் மெக்சிகோவில் வெடித்த வன்முறை..
சூனியக்காரி எனக்கூறி பெண்ணை உயிரோடு எரித்துக்கொன்ற கிராமத்தினர் - அதிர்ச்சி சம்பவம்
இரவில் குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து சத்தமாக கத்துகிறதா? இதுதான் காரணம்