நாளை தமிழகம் வரும் திரௌபதி முர்மு.. பலத்த பாதுகாப்பு.. திட்டம் என்ன?
President Droupadi Murmu Tamil Nadu Visit : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2025 செப்டம்பர் 2ஆம் தேதியான நாளை தமிழகத்திற்கு வருகை தருகிறார். இரண்டு நாட்கள் பயணமாக வரும் திரௌபதி முர்மு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதோடு, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனமும் செய்ய உள்ளார்.

சென்னை, செப்டம்பர் 01 : இரண்டு நாட்கள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகத்திற்கு (President Droupadi Murmu Tamil Nadu Visit) வருகை தர உள்ளார். இதனால், சென்னை மற்றும் திருவள்ளூர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பலமுறை வருக தந்து இருக்கிறார். அந்த வகையில், 2025 செப்டம்பர் 2ஆம் தேதி சென்னைக்கு திரௌபதி முர்மு வருகை தருகிறார். இதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2025 செப்டம்பர் 1-ம் கர்நாடகாவின் மைசூருவில் உள்ள அகில இந்திய பேச்சு, செவித்திறன் நிறுவனத்தின் (AIISH-ஏஐஐஎஸ்ஹெச்) வைர விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு, திரௌபதி முர்மு 2025 செப்டம்பர் 2ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார்.
2025 செப்டம்பர் 2ஆம் தேதி மதியம் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் திரௌபதி முர்மு, கார் மூலம் நந்தம்பாக்கம் வருகிறார். அங்கு சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன தின விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்ளவுள்ளார். இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் திரௌபதி முர்மு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிர்மலா சீதாராமனும் பேச உள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அன்றைய தினம் இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திரௌபதி முர்மு தங்குகிறார்.




Also Read : முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமி.. வாக்குறுதி நிறைவேற்ற தவறிவிட்டார் – பிரேமலதா விஜயகாந்த்
தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
STORY | President Murmu on three-day visit to Karnataka, Tamil Nadu from Monday
READ: https://t.co/NmYBtkxuII pic.twitter.com/E1s4Q0cEtg
— Press Trust of India (@PTI_News) August 31, 2025
தொடர்ந்து, 2025 செப்டம்பர் 3ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்படுகிறது. பின்னர், திருச்சியில் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொள்கிறார்.
அங்கு மாணவ, மாணவிகளுக்கு அவர் பட்டம் வழங்குகிறார். இதனை அடுத்து, மீண்டும் திருச்சி சென்று, அன்றைய தினமே டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகையை தொடர்ந்து, பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, விமானம் நிலையம், நந்தம்பாக்கத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Also Read : தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்.. யார் இவர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்திலும் திரௌபதி முர்மு வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் திரௌபதி முர்மு தரிசனத்தை முன்னிட்டு, ஒரு மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோயிலை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.