விஜய்யின் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு – காரணம் என்ன?

TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகிற டிசம்பர் 4, 2025 அன்று சேலம் நகரில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை சார்பில் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

விஜய்யின் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு - காரணம் என்ன?

விஜய்

Published: 

20 Nov 2025 17:49 PM

 IST

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அதன் பிறகு அமைதியாக இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) சரியாக ஒரு மாதத்துக்கு பிறகு கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு கட்சிப் பணிகளில் மும்மூரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரச்சாரத்தை விஜய் தொடங்கவிருக்கிறார். இந்த நிலையில் வருகிற டிசம்பர் 4, 2025 அன்று மீண்டும் சேலத்தில் இருந்து பிரச்சாரம் மேற்கொள்ள தவெக சார்பில் சேலம் (Salem) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு தற்போது மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், சேலத்தில் இருந்து மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தவெக தரப்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டிசம்பர் 4, 2025 அன்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க : கோவைக்கும், மதுரைக்கும் “NO METRO”.. தமிழ்நாட்டை பழிவாங்குவதா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!

இதற்கு டிசம்பர் 3, 2025 அன்று கார்த்திகை வருவதாலும், டிசம்பர் 6, 2025 அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதாலும் இதற்கு இடையில் டிசம்பர் 4, 2025 அன்று பிரச்சாரம் மேற்கொண்டால் முறையாக பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதைக் காரணம் காட்டி காவல்துறை மறுத்துள்ளது. மேலும் டிசம்பர் 4, 2025 தவிர மற்ற தினங்களில் காவல்துறை அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  மேலும், பிரச்சாரத்தின்போது எவ்வளவு பேர் வருவார்கள் என்பது குறிப்பிடபடாமல் இருப்பதால் அதனை தெரிவித்தால் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : +2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!

அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள்

கரூர் சம்பவத்துக்கு பிறகு அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்துக்கு விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டங்கள் நடைபெற்றது. இதன் பிறகு ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும், 10 ஆயிரம் வரை மக்கள் கூடும் கூட்டங்களுக்கு ரூ.1 லட்சம் முன்பணமும், 20, ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் கூட்டங்களுக்கு ரூ.3 லட்சமும், 50 ஆயிரம் வரை மக்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ரூ.8 லட்சமும், 50 ஆயிரத்துக்கும் அதிகமாக கூட்டம் கூடினால் ரூ. 20 லட்சமும் முன்பணமும் செலுத்த வேண்டும். மேலும் ஏற்பாட்டாளர்கள் சொன்னதை விட அதிகம் கூட்டம் கூடினால் அது விதிமீறலாக கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?
2,860 கி.மீ நீளமுள்ள டானூப் நதி.. 10 நாடுகள் வழியாக பாயும் ஒரே நதி..
இறந்தவர்கள் உடலில் ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து உறுப்பு தானம் செய்த மருத்துவர்கள்.. ஆசியாவிலேயே புதிய முயற்சி!!
கூகுளின் டிரைவர் இல்லாமல் இயங்கும் காரால் பறிபோன பூனையின் உயிர்