PMK Anbumani Ramadoss: திமுகவிற்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமும் இல்லை.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!
2026 Tamil Nadu Assembly Elections: அன்புமணி ராமதாஸ் அவர்களின் 100 நாள் நடைபயணம், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறது. வியாபாரிகளின் சிரமங்கள், அரசு ஊழியர்களின் அதிருப்தி, ஏரிகள் அழிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
செங்கல்பட்டு, ஜூலை 26: 2026 சட்டமன்ற தேர்தலில் (2026 Tamil Nadu Assembly Election) எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகள் மக்களை ஈர்க்கும் வகையில் நடைப்பயணம் மற்றும் மாநாடுகளை நடத்தி வருகிறது. முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi palaniswami) ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தற்போது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss), “உரிமை மீட்க தலைமுறை காக்க” என்ற பெயரில் 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று அதாவது 2025 ஜூலை 25ம் தேதி திருப்போரூரில் நடை பயணத்தை மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், இன்று அதாவது 2025 ஜூலை 26ம் தேதி செங்கல்பட்டில் நடைபயணத்தை மேற்கொண்டார். இதில், ஆளும் திமுக அரசு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன..?
செங்கல்பட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “ இந்த பகுதியில் நான் வாக்குகளை கேட்டு வரவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் யார் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டாம் என்பதை தெரிவிக்க வந்துள்ளேன். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி செய்தது போதும், தமிழ்நாட்டில் வியாபாரிகள் இன்றைய சூழ்நிலையில் வியாபாரமே செய்ய முடியாத நிலை எழுந்துள்ளது. திமுகவினர் தினமும் மாமூல் கேட்டு தொந்தரவு செய்வதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ALSO READ: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. முதலமைச்சரிடம் இருந்து செல்லும் கோரிக்கை மனு!
2வது நாள் நடைப்பயணம்:
“வருங்கால தமிழகம்”
அண்ணன் அன்புமணி இராமதாஸ் அவர்களின் “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” இரண்டாம் நாள் பயணம் செங்கல்பட்டில் தொடங்கியது.! #AnbumaniRamadoss #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க#தமிழகமக்கள்_உரிமைமீட்புப்பயணம் pic.twitter.com/KLmh7xIRMY— Pattali Anand Krishnagiri (@pattalianand) July 26, 2025
அரசு அலுவலக ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் சுமார் 80 லட்சம் பேர் உள்ளனர். இந்த வாக்குகளை வைத்தேதான் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எதையும் செய்யாமல் திமுக, அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்டார்கள். எனவே, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.
24 மணிநேரமும் போதை பொருள் கிடைக்கும். ஆனால், திமுக ஆட்சியில் சமூக நீதி மட்டும் கிடைக்காது, திமுகவிற்கும் சமூக நீதிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு அதிகாரம் இல்லை என சட்டமன்றத்தில் பொய் சொல்கிறார்” என்றார்.
ALSO READ: அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை… டிஜிபி விளக்கம்!
பல ஏரிகள் அழிந்தன:
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், “ செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு காலத்தில் சுமார் 3800 ஏரிகள் உள்ளன. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மட்டும் சுமார் 2,800 ஏரிகள் இருந்தது. ஆனால், இப்போது இந்த 2 மாவட்டங்களிலும் வெறும் 900 ஏரிகள் மட்டுமே உள்ளது. இந்த ஏரிகள் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகமே ஏரி மீது கட்டப்பட்டுள்ளது. அதேபோல், தற்போது ஏராளமான அரசு அலுவலங்களும், தனியார் நிறுவனங்களும் கட்டப்பட்டுள்ளது. ” என்றார்.