கம்பெனி ஓனர் மனைவியுடன் தொடர்பு.. திருப்பத்தூரில் இளைஞர் கொலை

Tirupathur Crime News:தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஊழியர் பவன்குமாரை, பெங்களூரு மிக்ஸர் கம்பெனி உரிமையாளர் அல்போன்ஸ் திருப்பத்தூரில் அடித்துக் கொன்றார். அல்போன்ஸ் மனைவி சத்யாவுக்கும் பவன்குமாருக்கும் இடையே தகாத உறவு தொடர்ந்ததால், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

கம்பெனி ஓனர் மனைவியுடன் தொடர்பு.. திருப்பத்தூரில் இளைஞர் கொலை

பவன் குமார்

Updated On: 

03 Oct 2025 07:01 AM

 IST

திருப்பத்தூர், அக்டோபர் 3: தனது மனைவியுடன் தொடர்பில் இருந்த ஊழியரை, மிக்ஸர் கம்பெனியின் உரிமையாளர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரம் பகுதியில் மிக்சர் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மிக்சர் போடும் பணிக்காக கேபி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பவன் குமார் மற்றும் அவரது தம்பி ஆகியோர் வேலைக்கு சேர்ந்தனர். இந்த நிலையில் 19 வயதான பவன் குமாருக்கும் அல்போன்ஸின் மனைவி சத்யாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

மனைவியின் தகாத உறவு

இருவரும் அடிக்கடி தனிமையில் நேரம் செலவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தனது மனைவியின் கள்ள உறவு பற்றி அறிந்த அல்போன்ஸ் அவரைக் கண்டித்துள்ளார். மேலும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பவன் குமார் மற்றும் அவரது தம்பி இருவரையும் பணியில் இருந்து நீக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து பவன்குமார், அவரது தம்பி ஆகிய இருவரும் திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்திருக்கும் மரிமாணிக்குப்பம் தோட்டி குட்டை கிராமத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டுக்கு வந்து தங்கினர்.

Also Read:  தந்தை கண்முன்னே கழுத்தறுத்து கொல்லப்பட்ட பெண்.. மார்க்கெட்டில் இளைஞர் செய்த வெறிச்செயல்!

இதற்கிடையில் கணவனை விட பவன் குமார் மிகவும் அழகாக உள்ளார் என எண்ணிய சத்யா அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் அந்த உறவை தொடர்ந்து உள்ளார். இதற்கிடையில் இருவருக்கும் இடையேயான உறவு தொடர்வதை அறிந்த அல்போன்ஸ் சில வாரங்களுக்கு முன் தனது மனைவி சத்யாவை கண்டித்ததோடு மட்டுமில்லாமல் தாக்கியும் உள்ளார்.

இது தொடர்பாக பெங்களூரு போலீசில் புகார் அளித்த சத்யா அல்போன்ஸ் இடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான அல்போன்ஸ் பவன் குமாரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

Also Read: ஆறு பேரை வீட்டில் வைத்து தீ வைத்து கொளுத்திய விவசாயி.. மூட நம்பிக்கையின் உச்சத்தில் நடைபெற்ற சம்பவம்?

பவன்குமார் மீது சரமாரி தாக்குதல்

அதன்படி தனது நண்பர்கள் மூன்று பேருடன் காரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் வந்த அல்போன்ஸ், பவன் குமார் தங்கி இருக்கும் அவரது பாட்டி வீட்டை கண்டுபிடித்தார். ஆனால் அங்கு அவரது தம்பி மட்டுமே இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தம்பியை காரில் கடத்திச் சென்று  ஒரு இடத்தில் அடைத்து வைத்து பவன்குமார் இருக்கும் இடம் குறித்து கேட்டார்.

இப்படியான நிலையில் வெளியில் சென்றிருந்த பவன் பாட்டி வீட்டிற்கு திரும்பியதை அறிந்த அல்போன்ஸ், தனது கும்பலுடன் மீண்டும் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பவன் குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.  இதனை தொடர்ந்து அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் கும்பல் காரில் தப்பியது.

அக்கம் பக்கத்தினர் பவன் குமாரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதன் முடிவில் பெங்களூருவில் பதுங்கி இருந்த அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் பெரம்பூரைச் சேர்ந்த பாக்கியராஜ், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பொன்னையா, அழகு என்ற கதிர்வேலன் ஆகிய நான்கு பெயரை கைது செய்து திருப்பத்தூர் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.