தெற்கு பெங்களூருவில் உள்ள ஜக்கசந்திராவில் கட்டுமானத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் சாய்ந்ததால் அங்கு வசிப்பவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். தரைத்தளம் மற்றும் நான்கு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடம் வெறும் 750 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருவதாகவும், சட்டங்களுக்கு இணங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு நகரக் கழகம் அந்தக் கட்டிடம் சட்டவிரோதமானது என்பதை உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து உரிமையாளர் காலி செய்யத் தொடங்கியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.