Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை”.. அதிமுக எம்.பி தம்பிதுரை சூசக பதிலடி!!

தமிழ்நாடு அரசியல் அமைப்பில், கூட்டணி என்பது தேர்தல் வெற்றிக்கான அரசியல் தந்திரமாகவே இருந்து வருகிறது. மாநிலத்தில் கூட்டு அமைச்சரவை அமைப்பது என்பது அரிதானது. இங்கு பல தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் திமுகவும், அதிமுகவும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் அதிகாரத்தை பகிர்ந்தது கிடையாது.

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை”.. அதிமுக எம்.பி தம்பிதுரை சூசக பதிலடி!!
தம்பிதுரை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Nov 2025 10:55 AM IST

கிருஷ்ணகிரி, நவம்பர் 21: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் என அதிமுக எம்.பி தம்பிதுரை உறுதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டு மந்திரி சபை என்பது வாய்ப்பில்லாத ஒன்று என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவுக்கு, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என்பதை அவர் சூசகமாக கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. குறிப்பாக இந்த தேர்தலில் விஜய் அரசியல் வருகையால், களம் முற்றிலும் மாறுப்பட்டு காணப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. அந்தவகையில், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க பல்வேறு முக்கிய கட்சிகளும் போட்டிபோட்டு வருகின்றன.

இதையும் படிக்க : +2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!

தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பும் அதிமுக:

அதிமுக தரப்பில் தவெகவுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் வெளிப்படையாகவே தங்களது விருப்பத்தை தெரிவித்துவிட்டனர். எனினும், அதிமுக தற்போது பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால், அந்த கோரிக்கைக்கு தவெக தரப்பில் தற்போது வரை செவிசாயக்கப்படவில்லை. ஒருவேளை அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் நிச்சயம் தவெக அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அப்படி, கூட்டணி அமைந்தாலும் கூட விஜய் முதல்வர் பதவி வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருப்பதால், அதிமுக தர முன்வரும் துணை முதல்வர் பதவியை அவர் ஏற்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது

இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என விஜய் அதிரடியாக அறிவித்தது. தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அனைத்து கட்சிகளும் திமுக, அதிமுகவுக்கு ஆட்சியில் அதிகாரம் கேட்டு வற்புறுத்த தொடங்கியுள்ளன. இது தமிழகத்தின் பழம்பெரும் கட்சிகளான அவை இரண்டிற்கும் வரும் தேர்தலில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறப்படுகிறது.

கூட்டு மந்திரி சபை அமைய வாய்ப்பில்லை:

அதேசமயம், தமிழகத்தில் கூட்டு மந்திரி சபை அமைய வாய்ப்பில்லாத என அதிமுக மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்.பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகிலுள்ள சிந்தகம்பள்ளி கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டிய அதிமுக எம்பி தம்பிதுரை, பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

கூட்டணி ஆட்சி நடந்ததில்லை:

அப்போது அவர் கூறும்போது, தேர்தல் காலங்களில் கூட்டணி அமைப்பது அரசியலில் வழக்கமான ஒன்று. கடந்த காலங்களில் ராஜாஜி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன் தனித்தனியாக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றாலும், கூட்டணி ஆட்சியும் நடத்தியதில்லை, கூட்டு மந்திரிசபையும் அமைந்ததில்லை என்றார்.

அதிமுகவே ஆட்சி அமைக்கும்:

கூட்டணி என்பது வேறு, ஆட்சியை யார் முன்னெடுக்கப் போவது என்பது வேறு. 2026-ல் ஆட்சியை அதிமுக தான் நடத்தும். அதில் மற்ற கட்சிகள் பங்கு பெறுவதற்கு இடமே கிடையாது. 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும், மற்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிக்கும் வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : குளுகுளுவென மாறிய சென்னை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை..

மெகா கூட்டணி உருவாகும்:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்பு கூறியதுபோல், “மெகா கூட்டணியை உருவாக்குவோம், திமுகவை ஆட்சியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்புவோம்” என்ற கருத்தைத் தம்பிதுரை மீண்டும் வலியுறுத்தினார். அதோடு, சில கட்சிகள் கூட்டு அமைச்சரவையில் பங்கேற்போம் என கூறினாலும், அது அவர்களின் விருப்பமே தவிர அதிமுக தொண்டர்களும் சரி, மக்களும் சரி கூட்டு ஏற்கும் விஷயம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.