Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதல்வர் ஸ்டாலின் மீது சீமான் கடும் தாக்கு: ‘ED ரைடு வந்தால் மோடியை பார்க்கச் செல்கிறீர்கள் ஏன்?

Seeman Trichy Address: திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கொள்கை வேறுபாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைபாடு, ED விசாரணை குறித்த முதல்வரின் நடவடிக்கை, நீதிமன்றங்களின் அதிகார விரிவாக்கம் உள்ளிட்டவற்றை சீமான் கண்டனம் செய்தார். புதிய தத்துவம், கோட்பாடு தேவை என்றும் வலியுறுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் மீது சீமான் கடும் தாக்கு: ‘ED ரைடு வந்தால் மோடியை பார்க்கச் செல்கிறீர்கள் ஏன்?
முதல்வர் ஸ்டாலின் மீது சீமான் கடும் தாக்குImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 13 Jun 2025 09:44 AM IST

திருச்சி மே 23: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman, Coordinator of the Naam Tamil Party), திருச்சியில் (Trichy)  முத்தரையர் சிலைக்கு மரியாதை (Respect for the statue of Mutharaiyar) செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் (Dravida Munnetra Kazhagam, Anna Dravida Munnetra Kazhagam, Bharatiya Janata Party, Congress) ஆகிய கட்சிகளுக்கு கொள்கை வேறுபாடுகள் எதுவும் இல்லையென சாடினார். மாற்றம் பெற புதிய தத்துவம், கோட்பாடு தேவை என்றார். மத்திய அரசு தமிழக நிதியை வழங்காததை திமுக அரசு மக்கள் முன் சொல்ல வேண்டியது கடமை என கூறினார். ED ரைடு வந்தால் முதல்வர் மோடியை சந்திக்க ஓடிச் செல்கிறார் என விமர்சனம் செய்தார். நீதிமன்றங்கள் முடிவெடுக்கும் நிலையில், சட்டமன்றம், பாராளுமன்றம் ஏன் இருக்க வேண்டும் எனக் கேள்வியெழுப்பினார்.

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழா

பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியினரால் இன்று ( 2025 மே 23) மரியாதை செலுத்தப்பட்டது.

கட்சிக் கொள்கை வேறுபாடுகள் இல்லை

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் உள்ள முக்கியமான கட்சிகள் திமுக மற்றும் அதிமுக இடையே உண்மையான கொள்கை வேறுபாடுகள் இல்லையென விமர்சித்தார். அதேபோல், தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் பெரிதாக கொள்கை வித்தியாசங்கள் இல்லை என்றும் கூறினார். “கட்சிக் கொடிகள் மட்டுமே வேறு,

ஆனால் கொள்கைகள் ஒரே மாதிரியானவை” எனத் தெரிவித்து, இது மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத சூழலை உருவாக்கி உள்ளது என்றார். மாற்றம் என்பது வெறும் கட்சி பெயர் அல்லது பிரமாண்டமான வாக்குறுதிகளால் அல்ல, புதிய தத்துவம், கோட்பாடு மற்றும் கருத்தியலால் மட்டுமே சாத்தியமாகும் எனவும் சீமான் வலியுறுத்தினார்.

திமுக அரசின் பொறுப்பு

மத்திய அரசு தமிழகத்திலிருந்து அனைத்து வரிகளையும் வசூலித்துவிட்டு, மாநிலத்துக்கான நிதி, கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றை வழங்க தவறுவதில், மக்களிடம் இதனை எடுத்துச் சொல்லும் பொறுப்பு திமுக அரசுக்கே உண்டு என சாடினார்.

முதல்வர் மீது நேரடி தாக்கு

முந்தைய மூன்று நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காத முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது டெல்லி சென்று கலந்து கொள்வதை சீமான் கேள்விக்குள்ளாக்கினார். “ED ரைடு வந்தால் ஓடிச் சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள், ஏன்?” எனக் கேட்கும் வகையில் கடுமையாக விமர்சித்தார்.

நாட்டின் நிர்வாகத்தில் நீதிமன்றங்களின் மீறல்?

இந்நிலையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் முக்கியமான நிர்வாக அமைப்புகள் என்ற போதும், தற்போது அனைத்து முக்கிய முடிவுகளையும் நீதிமன்றங்களே எடுத்து வருவது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும் என்று சீமான் அச்சம் தெரிவித்தார். “இவ்வாறே தீர்மானிக்கப்படுகிற நிலை தொடருமானால், சட்டமன்றங்களையும் பாராளுமன்றங்களையும் கலைத்துவிடலாம்” என்றார்.

முன்னதாக, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்த முதல்வர் ஸ்டாலின், தற்போது தமிழகத்துக்கான நிதி கோரிக்கையுடன் செல்வதாக தெரிவித்திருந்ததைச் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.