திருமணம் முடிந்த மூன்றே மாதங்களில் இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோக சம்பவம்!
Young Man Died in Accident | திருவாரூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகும் நிலையில், அவர் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
திருவாரூர், செப்டம்பர் 02 : திருவாரூரில் (Thiruvarur) திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆகும் நிலையில், இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறில் கடந்த சில நாட்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருமணமான மூன்றே மாதங்களில் சாலை விபத்தில் உயிரிழந்த நபர்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் பரசுராம். 20 வயதாகும் இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரசுராமிடம் கோபித்துக்கொண்டு காயத்ரி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க : உடலில் அரிப்பு, வீக்கம்.. பறிபோன இளம்பெண் உயிர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்த நபர்
இந்த நிலையில், ஆகஸ்ட் 31, 2025 அன்று இரவு வடகோவனூரில் இருந்து லெட்சுமாங்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது சாலையில் எதிரே வந்த அரசு பேருந்து மோதி விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க : திருமணத்தில் கலாட்டா செய்த நண்பர்கள்.. மணமகள் எடுத்த பகீர் முடிவு.. சோகத்தில் மணமகன்!
இந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.