Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருமணத்தில் கலாட்டா செய்த நண்பர்கள்.. மணமகள் எடுத்த பகீர் முடிவு.. சோகத்தில் மணமகன்!

Krishnagiri Wedding Cancelled | கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் ஒன்று நடைபெறுவதாக இருந்துள்ளது. இந்த நிலையில், மணமகனின் நண்பர்கள் குடித்துவிட்டு மணமகளை மேடையில் நடனமாட அழைத்து வறுபுறுத்திய நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

திருமணத்தில் கலாட்டா செய்த நண்பர்கள்.. மணமகள் எடுத்த பகீர் முடிவு.. சோகத்தில் மணமகன்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Sep 2025 19:43 PM

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 31 : கிருஷ்ணகிரியில் (Krishnagiri) திருமண வரவேற்பின் போது மணமகனின் நண்பர்கள் குடித்துவிட்டு அட்டகாசம் செய்ததால் ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் நண்பர்கள் செய்த அட்டகாசத்தால் இரு வீட்டாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், மணமகள் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில், மணமகனின் நண்பர்களால் திருமணம் நடைபெறாமல் நின்றது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமண வரவேற்பில் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்த நண்பரகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படித்த இளம்  பெண்ணுக்கும், ஒசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளைஞருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கிய வரவேற்பு, இரவு 9 மணி வரை  எந்தவித சிக்கல்களும் இல்லாமல் சென்றுள்ளது. அதன் பிறகு டிஜே இசை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : கடைசி நேரத்தில் நின்ற திருமணம்.. மணமகள் சொன்ன பகீர் காரணம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

மணமகளை நடமாட அழைத்த மணமகனின் நண்பர்கள்

திருமண வரவேறிபில் டிஜே தொடங்கியதும் அங்கு வந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் மண பெண்ணை நடனமாட அழைத்துள்ளனர். ஆனால், அந்த மணப்பெண் நடனமாட மறுத்துள்ளார். ஆனால், அவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளாத மாப்பிள்ளையின் நண்பர்கள் தொடர்ந்து மணமகளை நடனமாட அழைந்த்துள்ளனர். இதனை கவனித்துக்கொண்டு இருந்த மணமகளின் உறவினர்கள் எங்கள் பெண் மேடையில் நடனமாட மாட்டார் என கூறியுள்ளனர். இதனால் மணமகள் உறவினர் மற்றும் மணமகன் நண்பர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் திருமண மண்டபத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.

இதையும் படிங்க : கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி பலி.. பெற்றோர் செய்த கொடூரம்.. திருவள்ளூரில் அதிர்ச்சி!

இந்த கலவரத்தை கண்டு கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக மண்டபத்தில் கட்டப்பட்ட பேனர்கள், அலங்காரங்கள் அகற்றப்பட்டன. திருமண வரவேற்பை தொடர்ந்து அடுத்த நாள் காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில், மண்டபத்திற்கு வந்த உறவினர்கள் திருமணம் நின்ற செய்தியை கேட்டு ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.