IPL 2026: தீவிர பயிற்சியில் தோனி, பிரெவிஸ்.. இன்றைய பஞ்சாப் போட்டியில் களமா?
MS Dhoni - Dewald Brevis: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சி அமர்வின்போது, டெவால்ட் பிரேவிஸ் அணியின் பிசியோவுடன் லேசாக ஓடுவதைக் காண முடிந்தது. தற்போது, அவர் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக வலைப்பயிற்சியிலும் பேட்டிங் செய்தார்.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) தங்களது முதல் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கை கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனுபவ வீரர் எம்.எஸ். தோனியும், இளம் வீரர் டிவால்ட் பிரெவிஸும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவ்விரு வீரர்களும் விளையாடுவார்களா என்பதில் இன்னும் தெளிவு இல்லை என்றாலும், அவர்கள் மீண்டும் பயிற்சிக்குத் திரும்பியிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அனுபவமின்மையால் சென்னையின் பேட்டிங் தடுமாறியது. இதையடுத்து, எம்.எஸ். தோனி (MS Dhoni) மற்றும் பிரெவிஸின் வருகை சென்னை அணியை வலுப்படுத்தக்கூடும்.
ALSO READ: பயிற்சியைத் தொடங்கிய எம்.எஸ்.தோனி.. சேப்பாக்கத்தில் நாளை விளையாடுவாரா..?




எம்.எஸ்.தோனிக்கு காயம்:
He’s a silent guardian.
A watchful protector! 💛✨#WhistlePodu #Yellove pic.twitter.com/Uax3cshu56— Chennai Super Kings (@ChennaiIPL) April 2, 2026
கால் தசைப்பிடிப்பு காரணமாக எம்.எஸ். தோனி இந்த சீசனின் முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார். இதற்கிடையில், டெவோல்ட் பிரெவிஸ் பக்கவாட்டுத் தசைப்பிடிப்பு காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 சீசனின் தங்களது முதல் போட்டியில் விளையாடவில்லை. இருப்பினும் பிரெவிஸ் மீண்டும் அணிக்குத் திரும்புவது குறித்தும் தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சி அமர்வின்போது, பிரேவிஸ் அணியின் பிசியோவுடன் லேசாக ஓடுவதைக் காண முடிந்தது. தற்போது, அவர் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக வலைப்பயிற்சியிலும் பேட்டிங் செய்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி:
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பான செய்தியாளர் சந்திப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இரு வீரர்களின் உடற்தகுதி குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. பிரெவிஸ் குறித்து கெய்க்வாட் கூறுகையில், ”பிரேவிஸ் இன்று பயிற்சிக்கு வந்தார். இருப்பினும், தற்போதைக்கு அவரது உடல்நிலை பற்றி உறுதியாக எதையும் கூறுவது கடினம். மேலும், முந்தைய நாள் இது தொடர்பாக நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இருப்பினும், அணியின் பயிற்சி அமர்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, டெவோல்ட் பிரெவிஸ் ஒரு தனி வலைப்பயிற்சியில் பேட்டிங் ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்தார். தொடர்ந்து, எம்.எஸ். தோனியின் உடற்தகுதி குறித்துக் கேட்டபோது, அது இரண்டு வாரங்களில் அல்லது பதின்மூன்றாவது நாளில் தெரிந்துவிடும் என்று கெய்க்வாட் கூறினார். ஆனால், பயிற்சி அமர்வு முடிவடைவதற்குச் சற்று முன்பு, தோனி களத்திற்கு வந்து வலைப்பயிற்சியில் பயிற்சி மேற்கொண்டார்.
ALSO READ: சேப்பாக்கத்தில் வெற்றியை பதிக்குமா சென்னை? தட்டி பறிக்குமா பஞ்சாப்?
யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்..?
டெவோல்ட் பிரெவிஸ் விலகியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷார்ட்டுக்கு நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், சர்பராஸ் கான் இம்பாக்ட் வீரராக மிடில் ஆர்டரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக ஓய்வு இருக்காது. இன்றைய போட்டிக்கு பிறகு, அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக வருகின்ற 2026 ஏப்ரல் 5ம் தேதி எம்.சின்னசாமி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.