Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுகவின் பெயரில் 41 ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Anbil Mahesh : கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் தங்கள் யூகங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார்.

திமுகவின் பெயரில் 41 ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அன்பில் மகேஸ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Sep 2025 18:45 PM IST

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய்யின் (Vijay) பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக எம்பி ஹேமாமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட விசாரணைக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூருக்கு உடனடியாக அமைச்சர் அன்பில் மகேஸ் வந்தது சர்ச்சையான நிலையில் இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நான் கரூர் சென்றதற்கான காரணம் இதுதான்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தார். அவர் பேசியதாவது, ”தமிழக அரசு சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் எல்லோரும் தங்கள் கருத்துக்களை சொல்லுவாங்க. நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் வந்து கொண்டிருந்தபோது எனக்கு செய்தி வருகிறது. உடனடியாக கரூர் போங்க, அங்கு கூட்டநெரிசல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது என தகவல் வந்தது. நான் அங்கு 10 மணிக்கு தான் சென்றேன். அப்போது இறந்த உடல்களை குறிப்பாக குழந்தைகளை எடுத்து வரும்போது கண்கலங்கி விட்டேன். முதல்வர் சொன்னது மாதிரி எந்த தலைவரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு இப்படி ஆகவேண்டும் என நினைக்க மாட்டார்கள்” என்றார்.

இதையும் படிக்க : கரூர் சம்பவத்தில் பொய் செய்தி.. யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடி கைது!

திமுகவின் பெயரில் 41 ஆம்புலன்ஸ் வந்தது எப்படி?

பின்னர் அவரிடம் திமுகவின் பெயரில் 41 ஆம்புலன்ஸ் வந்தது மற்றும் வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் செந்தில் பாலாஜியின் அறக்கட்டளை என பெயரிடப்பட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த அவர், இதுபோன்ற சூழந்நிலைகளில் எவ்வளவு தூரம் மக்கள் வருவார்கள் என்ற ஒன்று இருக்கும். எல்லோருக்கும் மன வேதனை இருக்கிறது. அவர்களுக்கும் மன வேதனை இருக்கும். நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை வரும்போது இது குறித்து தெரியவரும். அப்போது நாம் பேசுவோம் என பேசினார்.

இதையும் படிக்க : எதை மறைக்க வழக்குப்பதிவு? சமூக வலைதள கணக்காரளர்கள் கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்..

இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட விஜய், தான் 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் ஆனால் எங்கும் எவ்வித அசம்பாவிதங்களும் நேரவில்லை எனவும் கரூரில் இது போன்று நடைபெற்றிருப்பதை சந்தேகத்தை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் பேசிய அவர், மக்கள் எல்லோரையும் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், கரூர் மக்கள் உண்மைகளை சொல்லும்போது அந்த மக்களே நேரடியாக வந்து உண்மைகளை சொல்வது போல இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் என்றார்.