நண்பர்களே, நம் அரசியல் பயணம் இன்னும் ஸ்டிராங்கா தொடரும்… – முதன்முறையாக மனம் திறந்த விஜய்
TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பீல் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் முதன்முறையாக மனம் திறந்துள்ளார். அதில் பேசிய விஜய் என் வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையைை எதிர்கொண்டது இல்லை என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பீல் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் முதன்முறையாக மனம் திறந்துள்ளார். அதில் பேசிய விஜய் என் வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையைை எதிர்கொண்டது இல்லை. மனம் முழுக்க வலி என்றார். மேலும் தனது அரசியல் பயணம் இன்னும் வலுவாக தொடரும் என தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்திய அவர், சிஎம் சார் பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தன் கட்சியினரை விட்டு விடுங்கள் என்று பேசினார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
வீடியோவில் விஜய் பேசியதாவது, என் வாழ்க்கையில் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை மனது முழுக்க வலி. இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வருகிறார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான். மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு. அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் தான் இந்த சுற்றுப் பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி, மக்களுடைய பாதுகாப்பில் எந்த வித குறைபாடும் இருக்க கூடாது என்பது தான் என் மனதில் இருக்கும் எண்ணம்.




இதையும் படிக்க : கரூர் சம்பவம்.. மற்றொரு தவெக நிர்வாகி கைது.. புஸ்ஸி ஆனந்தை நெருங்கும் தனிப்படை?
நான் கிளம்பி சென்றதற்கான காரணம் இதுதான்
அரசியல் காரணங்களை தள்ளி வைத்து விட்டு மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து அதற்கான இடங்களை தேர்வு செய்து அனுமதி கேட்டோம். ஆனா நடக்க கூடாதது நடந்து விட்டது. நானும் மனுஷன் தானே. இந்த மாதிரியான சூழ்நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக தான் கிளம்பிசென்றேன் என்றார்.
விஜய் பேசிய வீடியோ
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
அரசியல் பயணம் இன்னும் ஸ்டிராங்கா தொடரும்
கூடிய சீக்கிரமே நான் உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் என்னுடைய வலிகளை புரிந்துகொண்டு எங்களுடன் உடன் நின்ற அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்கு பிரச்சாரத்துக்கு போனோம். இது மாதிரி எதுவும் நடக்கவில்லை. ஆனால் கரூரில் மட்டும் இதுபோன்று நடக்கிறது. எப்படி நடந்தது.மக்கள் எல்லோரையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கரூர் மக்கள் உண்மைகளை சொல்லும்போது அந்த மக்களே நேரடியாக வந்து உண்மைகளை சொல்வது போல இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் பேசிவிட்டு வந்ததைத் தவிர நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.
இதையும் படிக்க : எதை மறைக்க வழக்குப்பதிவு? சமூக வலைதள கணக்காரளர்கள் கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்..
இருப்பினும் எங்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் தோழர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் உள்ள நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிஎம் சார், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது என்றால், என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க. அவங்க மேல கை வைக்காதீங்க. நான் வீட்ல இருப்பேன். இல்ல ஆஃபிஸ்ல இருப்பேன். என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்ங்க. நண்பர்கள், தோழர்களே நம்முடைய அரசியல் பயணம் இன்னும் ஸ்டிராங்கா தொடரும் என்றார்.